IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மனிதனின் தோலில் 9 மணி நேரம் வரை கொரோனா தொற்று நீடிக்கும்! புதிய தகவல்

Get real time updates directly on you device, subscribe now.

கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக உலகம் முழுவதும் சொல்லும் ஒரே வார்த்தை கொரோனா. அந்த அளவிற்கு பல கோடி மக்களை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்படையச் செய்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதனைப்போன்று மறுபக்கம் கொரோனா வைரஸ் மனிதன் உடலில் எத்தனை மணி நேரம் தாக்குபிடிக்கும் என்ற ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது.

கிளினிகல் இன்பெக்டியஸ் டிஸீஸ் என்ற பத்திரிகையில் கொரோனா வைரஸ் குறித்து தற்போது ஒரு புதிய கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கொரோனாவுக்கு முன்னர் உலகை அடிக்கடி அச்சுறுத்தி வந்த இன்ப்ளூயன்சா வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தற்போது கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகள் கூறுகையில் இன்ப்ளூயன்சா வைரஸ் மனிதர்களின் தோலில் 1.8 மணி நேரம் உயிரோடு இருக்கும் எனவும் ஆனால் கொரோனா வைரஸ் 9 மணிநேரம் வரை உடலில் அதே வீரியத்தோடு இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வை ஜப்பானிய விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

சனிடைசர்களில் பயன்படுத்தப்படும் எத்தனால் கொரோனா வைரஸ் மீது பட்டவுடன் 15 வினாடிகளில் வைரஸ் அழிந்துவிடும். இது ப்ளூ வைரஸுக்கும் பொருந்தும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுவதே இதற்கு சிறந்த தடுப்புமுறை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

#coronaupdates #coronavirus #in4net

Aromatics and Cosmetics

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader