IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கொரோனா வைரசை தடுக்க மருந்து கண்டுபிடிப்பு

155

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குடும்பத்தில் இருந்து ஏழாவதாக ஒரு வைரஸ் சீனாவையே பயமுறுத்திவருகின்றது. இவை வுஹான்ற சிட்டில இருக்குற மார்க்கெட்ல் இருந்து தோன்றி உள்ளது.

இந்த வைரஸ் தொற்று விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறிகள் ஜலதோசம், தும்மல், இருமல் தொண்டைவலி, காய்ச்சல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. இதை தொடர்ந்து இந்த வைரஸ் நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தி நுரையீரலை தாக்குகிறது. இந்த கொரோனா வைரசால் இதுவரைக்கும் 425பேர் சீனாவுல இறந்துள்ளதாகவும், 20,438 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Posts
1 of 7

இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கா வுஹானில் புதிதாக மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை இரவு பகலாக ஏழாயிரத்துக்கும் அதிகமான பணியாளர்கள் ஈடுபட்டு திட்டமிட்டதற்க்கு ஒரு நாள் முன்னதாகவே மருத்துவமனையை கட்டி முடித்துள்ளனர். இங்கு 1000 பேர் சிகிச்சை பெற முடியும். 30 அவசர சிகிச்சைப் பிரிவை கொண்ட இந்த மருத்துவமனையை சீன அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கி வைத்தார். இந்த மருத்துவமனையில் நேற்று முதல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த மருத்துவமனையில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் 1600 படுக்கைகள் கொண்ட மற்றொறு சிறப்பு மருத்துவனை கட்டப்பட்டு வருகிறது. அதன் பணிகள் நாளை மறுநாள் முடிவடையும் என சீன அரசு கூறியுள்ளது.

இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்து விட்டதாக தாய்லாந்த அரசு அறிவித்துள்ளது. டாக்டர் கிரிங்கஸ்க் தலைமையிலான டாக்டர்கள் குழு இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த வழக்கமாக கடுமையான காய்ச்சலுக்கு கொடுக்கும் தடுப்பு மருந்துடன் எச்.ஐ.வி. கிருமி தொற்று நோய்க்கான தடுப்பு மருந்தையும் கலந்து 71 வயது சீனப் பெண் நோயாளிக்கு டாக்டர்கள் கொடுத்தனர். கொடுத்த 48 மணி நேரத்துக்குள் அவருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது காய்சல் விலகி விட்டது. இந்த சோதனையை பல நாடுகள் தங்கள் ஆய்வுக் கூடங்களில் சோதித்திப் பார்த்து வருகின்றன. அந்த சோதனைகளில் வெற்றி கிடைத்தால் கொரோனா வைரஸ் பரவு வதை வெற்றிகரமாக தடுக்க முடியும் என்று கருதுகிறார்கள்.

#corona #virus #prevent #medicine