IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பாரம்பரிய முறையில் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பு

173

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்தியாவின் பாரம்பரிய மருத்துவமான ஆயுர் வேத முறைப்படி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் உலகின் 16 நாடுகளில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவாமல் இருக்கவும், வராமல் காக்கவும் இந்திய பாரம்பரிய மருத்துவமான ஆயுர்வேத முறையில், மருத்துவர்கள் விஷாரி என்ற மருந்தினைக் கண்டறிந்துள்ளனர்.

உயிரைக் கொல்லும் ஹச்.ஐ.வி, சார்ஸ் மற்றும் மெர்ஸ் வகை வைரஸ்களே இந்த நோய்க்குக் காரணம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது போன்ற நோய்க்கு ஆயுர்வேத சிகிச்சை அளித்து வரும் நானோ லைப் நிறுவனம் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த நிகழ்வில், அமெரிக்காவில் உள்ள மிசோரி பல்கலையின் ஆயுர்வேத மருத்துவர் வி.கட்டேஷ் கட்டி, கர்நாடக ஆயுர்வேத மருத்துவ ஆய்வாளர் சிட்டாமணி ஜோஷி, மற்றும் நானோ லைப் மேலாண்மை இயக்குநர், தீபக் ஶ்ரீமல் உள்ளிட்டோர் மருந்து குறித்து விளக்கம் அளித்தனர்.

Related Posts
1 of 7

அப்போது பேசியவர்கள், விஷாரி மருந்தில் ஆயுர்வேதத்தில் உள்ள ரஜ தபஸ்மா என்ற மூல மருந்தினைக்கொண்டு இந்த மருந்து தயாரிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இந்த சிகிச்சை அளிக்கப்படுவதன் மூலம் நோய் படிப்படியாக குணமடையும். உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ள வழிகாட்டுதல்படி, இந்த மருந்து கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், இந்த மருந்தின் தன்மை, அது செயல்படும் விதம் குறித்தும் விளக்கம் அளித்தனர்.

சிக்குன்குனியா போன்ற நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் சரியான மருத்துவம் இல்லாதபோது, நம் பாரம்பரிய முறையில் மருந்து கொடுக்கப்பட்டு குணப்படுத்தப்பட்டது. அதைப்போலவே இந்த மருந்தும் செயல்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நோய் வராமல் காக்க கை, கால், முகத்தை சுத்தமாக கழுவுதல், சளி, காய்ச்சல், இருமல், உடல்வலி, மூச்சுவிட சிரமப்படும் நபர்களிடம் நெருங்கி பேசுவதை தவிர்த்தல் என அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய முறைகளையும் விளக்கினர்.

#coronavirus #medicine #traditional #manner