வெப்பத்தினை அதிகப்படுத்தி கொரோனாவை அழிக்கும் புதிய மாஸ்க் அறிமுகம்

Get real time updates directly on you device, subscribe now.

கடந்த வருட இறுதியில் சீனாவில் பரவ ஆரம்பித்து 2020 மார்ச் மாதம் முதல் உலகையை அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இருப்பினும் இதன் தாக்கம் சிறிதளவு கூட குறையாமல் பரவுவதால் இதுகுறித்து முன்னெச்சரிக்கைகள் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதன் தாக்கம் சிறிதளவு குறைந்திருந்த போதிலும் தற்போது மீண்டும் பல நாடுகளில் வைரஸ் விஸ்வரூபம் எடுத்து வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவின் MIT நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் செயற்பாடுகளை முடக்கும் நோக்கில் புதிய வகை மாஸ்க் ஒன்றினை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னர் பயன்பாட்டில் உள்ள மாஸ்க் வகைகள் கொரோனா வைரஸ் உட்பட ஏனைய நுண்கிருமிகளை வடிகட்டும் ஆற்றல் கொண்டனவாக இருந்தன. தற்போது இந்தப்புதிய வகை மாஸ்க் ஆனது வெப்பநிலையை பிறப்பித்து கொரோனா வைரஸ் உட்பட ஏனைய நுண்கிருமிகளின் செயற்பாடுகளையும் முடக்கவல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மாஸ்க்கின் மாதிரி வடிவமைக்கப்பட்டு வருவதுடன், விரைவில் அசல் மாஸ்க் தாயரிக்கப்பட்டு விற்பனைக்கு விடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Aromatics and Cosmetics

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More