IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கொரோனாவை அழிக்க நித்தியின் மந்திரம்

304

சீனாவின் ஹீபெய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் பரவியது. தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாததால் காய்ச்சலை சரிப்படுத்தும் சிகிச்சை முறைகள் பயனளிக்கவில்லை.

இந்நிலையில் கொரோனா காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுவரை இந்த வைரசால் 1,016 பேர் பலியாகி உள்ளன. 42,638 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிள்ளனர்.

Related Posts
1 of 7

இந்நிலையில் கொரோனா வைரசை அழிக்க நித்தியானந்தா ஆலோசனை வழங்கி இருப்பதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் தொடர்ந்து இடைவிடாமல் ’ஓம் நித்தியானந்த பரமசிவோகம்’ என பிராத்தனை செய்து வந்தால் கொரோனா வைரசை அழித்து விடலாம் என நித்தியானந்தா கூறியுள்ளார். கொரோனா வைரசை அழிக்க இதுதான் நித்தியானந்தா மந்திரம் என்று இணையதளத்தில் வரலாக வீடியோ ஒன்று பரவி வருகிறது.

#corona #virus #Destroy #Nithyananda #Mantra