IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

எஸ்பிஐ வங்கிக்கு எதிராக கருத்து பதிவிடுவோர் மீது நடவடிக்கை

Get real time updates directly on you device, subscribe now.

கொரோனா வைரஸினால் உலகம் முழுவதும் ஆடிப்போயுள்ளது. பள்ளி, கல்லூரி, தொழில்துறை நிறுவனங்கள் என அனைத்தும் முடங்கிப் போகி உள்ளன. வைரஸை கட்டுப்படுத்த தனிமைப்படுத்துதல் மட்டுமே ஒரே வழி என அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் குறித்து நாள் தோறும் புதுவிதமான கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவி மக்களுக்கு மேலும் அச்சத்தை ஏந்படுத்துகின்றன.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் பாரத ஸ்டேட் வங்கி (SBI)க்கு எதிராக கருத்துக்களை பதிவிடும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வங்கி நிர்வாகம் எச்சரிக்கை செய்துள்ளது. இதுதொடர்பாக ஸ்டேட் வங்கி அனைத்து மண்டல தலைமை பொதுமேலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அந்த அறிக்கையில், ‘நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், பண பரிவர்த்தனை போன்ற நடவடிக்கையில் ஸ்டேட் வங்கி ஈடுபட்டு வருகிறது. வங்கியின் கொள்கைகள், நிர்வாகத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

கொரோனா பரவி வரும் சூழலில், ஸ்டேட் வங்கி இயங்கி வருவது அதன் ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இதனால் அவர்களில் சிலர் வங்கிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஸ்டேட் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இதுதொடர்பா மேற்கு வங்கத்தில் வங்கிக்கு எதிராக சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக, 2 ஊழியர்கள் மற்றும் ஒரு மூத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை பல்வேறு ஸ்டேட் வங்கி ஊழியர்கள் விமர்சித்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் கூறும்போது, ‘இந்திய குடிமக்களாக இருக்கும் நாம் தற்போதைய சூழல்கள் குறித்து சமூக வலைதளங்களில் வரும் பதிவுகளை பரந்த கண்ணோட்டத்துடன் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி ஸ்டேட் வங்கி சுற்றறிக்கை அனுப்பியிருப்பது, அரசியலமைப்பு சட்டம் 19 வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் உள்ளது’ என்று கூறியுள்ளார்.

இதேபோன்று, ஸ்டேட் வங்கியின் சுற்றறிக்கை ஜனநாயக உரிமைகளை பறிக்கும் செயல் என்று அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் கண்டித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து ஸ்டேட் வங்கியின் கொல்கத்தா மண்டல தலைமை மேலாளர் ரஞ்சன் குமார் அளித்துள்ள பேட்டியில், ‘ கொரோனா அல்லது எந்தவொரு விவகாரமாக இருந்தாலும் சரி; ஒவ்வொருவருக்கும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை உண்டு. ஆனால் அந்த கருத்துக்கள் வங்கியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடாது.

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களின் நலனுக்காக ஸ்டேட் வங்கி தனது சேவையை தொடர்ந்து அளித்து வருகிறது’ என்றார்.

முன்னதாக கொரோனா வைரஸ் பரவுதல் காரணமாக ஸ்டேட் வங்கிகள் தற்காலிகமாக மூடப்படும் என தகவல்கள் வெளியானது. இதனை மறுத்த வங்கி நிர்வாகம், தனது பெரும்பாலான கிளைகள் செயல்பாட்டில் இருக்கும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More