IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மதுரையில் கொரனோ பாதிப்படைந்தவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? அலசும் அதிகாரிகள்

Get real time updates directly on you device, subscribe now.

மதுரையில் முதன்முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபரோடு தொடர்பிலிருந்த 60 நபர்களை தொடர்ந்து கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மதுரை ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் 144 தடை உத்தரவு குறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த நபர் அரசு ராஜாஜி மருத்துவமனையில் வெண்டிலேட்டரின் உதவியின்றி மிக இயல்பாக உள்ளார்.

பல்வேறு வகையான உடற்கோளாறுகள் அவருக்கு முன்னரே உள்ளது. எனவே அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவரது தொடர்புகள் குறித்த அனைத்து விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

அவருடன் நெருக்கமாக இருந்த குடும்ப உறவுகள் அல்லாத 60 நபர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளோம். அறிகுறி இல்லாத நபர்களை வீட்டில் தனிமைப்படுத்த வேண்டும் என்பதை அறிவுறுத்தியுள்ளோம். ஒரு குழு அமைக்கப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

வெளிநாட்டிலிருந்து மதுரைக்கு 439 பேர் வருகை தந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader