IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கொரோனாவிற்கு புதிய பெயர் : உலக சுகாதார நிறுவனம்

123

Get real time updates directly on you device, subscribe now.

சீனாவில் கொரோனா வைரசிற்கு கோவிட் 19′ (COVID-19) என உலக சுகாதார நிறுவனம் (WHO) பெயரிட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1110 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த காய்ச்சலுக்கு 42,708 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாள்தோறும் கொரோனா காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாததால் காய்ச்சலை சரிப்படுத்தும் சிகிச்சை முறைகள் பயனளிக்கவில்லை. சீனாவைத் தொடர்ந்து ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூரில் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரேயேசஸ் கூறும்போது, கொரோனா வைரசிற்கு கோவிட்-19 (COVID-19) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தப் பெயர் பூமியில் எந்தவொரு தனி நபருக்கோ, விலங்குகளுக்கோ, இடத்துக்கோ வைக்கப்படவில்லை. மேலும் சி ஓ வி ஐ டீ என்ற இந்தப் பெயரில் சி ஓ என்பது கொரோனா என்ற வார்த்தையையும், வி ஐ என்பது வைரஸ் என்ற வார்த்தையையும், டீ என்பது டிசீஸ் எனப்படும் நோய் என்ற வார்த்தையையும் குறிப்பதாக டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். பின்னர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 99% பேர் அவசர நிலை சிகிச்சை கட்டத்தில் உள்ளன. இந்த கொரோனா வைரஸ் சார்ஸ் வைரஸ் குடும்பத்தை சார்ந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

#coronavirse #WorldHealthOrganization #NewName

Get real time updates directly on you device, subscribe now.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More