IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் துவக்கம்

Get real time updates directly on you device, subscribe now.

கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் இரண்டு கட்ட பரிசோதனையில், பக்க விளைவுகள் ஏற்படுத்தாத நிலையில் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் துவங்கப்பட உள்ளது.

ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் இறுதிகட்ட நிலையை எட்டியுள்ளது. இந்த மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழகத்தில், செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துாரில் உள்ள, எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லுாரியில், அதற்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அங்கு, முதற்கட்டமாக, 30 தன்னார்வலர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு, பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், வெற்றி கிடைத்ததாக, எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து 150க்கும் மேற்பட்டோருக்கு மருந்து செலுத்தப்பட்டு இரண்டாம் கட்ட பரிசோதனைகள் நடந்தது. மருந்து செலுத்தப்பட்டவர்களின் உடல்நிலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்தமாத இறுதிக்கும் மூன்றாம் கட்ட பரிசோதனை துவக்கப்பட உள்ளது.

கோவாக்சின் மூன்றாம் கட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: மனிதர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தி பரிசோதிப்பதில், இரண்டு கட்ட ஆராய்ச்சி நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளோம். அடுத்த சில நாட்களில், மூன்றாம் கட்ட ஆய்வு துவக்கப்பட உள்ளது.

இதுவரை கோவேக்சின் மருந்தால், பக்கவிளைவு ஏற்படவில்லை. எனினும், மருந்தின் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை தொடர் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. அதற்கு, ஆறு மாதங்கள் தேவைப்படலாம் என்று, அவர் கூறினார்.

Aromatics and Cosmetics

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader