IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கொரானாவால் இராமேஸ்வரம் முடங்கியது ! வியாபாரிகள் கவலை

Get real time updates directly on you device, subscribe now.

கொரானா பொது முடக்கம் காரணமாக, கடந்த மார்ச் 24 ம் தேதி முதல் தற்போது வரை இராமேஸ்வரம் கோவில் மூடப்பட்டுள்ளது.

இதனால் கோவிலை சுற்றியுள்ள வியாபாரிகள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகளின் வருகையிழந்து தங்களது வாழ்வாதாரத்தை தொலைத்து கவலையில் உள்ளனர்.

பொதுமுடக்கம் இல்லாத நாட்களில் ராமேஸ்வரத்திற்கு மாதம் தோறும் 10 முதல் 15 லட்சம், ஆண்டுதோறும் 1.30 கோடி பக்தர்கள் வந்து செல்வார்கள்.

இந்த பக்தர்களின் வருகை தான், ராமேஸ்வரம் மாநகராட்சிக்கும் அங்குள்ள வியாபாரிகளுக்கும் வருவாயைத் தரக்கூடியது.

ஆனால், கடந்த 90 நாட்கள் பொதுமுடக்கத்தால் சுற்றுலா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதோடு இதை நம்பியிருக்கக்கூடிய வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader