IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கொரோனா எல்லாம் முடிந்துவிட்டது, தேவையில்லாமல் ஊரடங்கை நீட்டித்துள்ளனர் – பாஜக தலைவர் பேச்சு

Get real time updates directly on you device, subscribe now.

நாடு முழுவதும் கொரோனா எல்லாம் முடிந்துவிட்டது எனவும், தேவையில்லாமல் ஊரடங்கை நீட்டித்துள்ளதால் பாஜக கட்சி பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த முடியவில்லை என மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் பேசியுள்ளார்.

இந்தியாவில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 3 ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் மேற்கு வங்கத்தின் ஹூக்ளியில் பாஜக கட்சி கூட்டத்தில் நோய் பரவல் குறித்த அச்சமின்றி ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் அந்த மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் பேசியதாவது: பாஜகவினர் பெருந்திரளாக கூடியிருப்பதால் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும்.

இங்கு கொரோனா எல்லாம் முடிந்துவிட்டது. தேவையில்லாமல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஊரடங்கை அமல்படுத்தி உள்ளார். இந்த ஊரடங்கு அமலில் இருப்பதால் பாஜகவால் பொதுக்கூட்டங்கள், கட்சி பேரணிகள் நடத்த முடியாமல் போகிறது. இனி நாமாகவே தேர்தல் பேரணிகளை நடத்த வேண்டியதுதான் என்று அவர் கூறினார்.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader