IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பதுக்கலை தவிர்க்க முகக்கவசம், கிருமி நாசினிகள் ஏற்றுமதி செய்ய தடை

Get real time updates directly on you device, subscribe now.

கொரனோ அச்சுறுத்தல் காரணமாக கிருமிநாசினிகள் மற்றும் சுவாசக் கருவிகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

சீனாவில் உருவான கொரனோ வைரஸ் இந்தியா உள்பட 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வைரஸின் தாக்கம் காணப்பட்டு வருகிறது. இதுவரை 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரனோ வைரஸ் பரிசோதனை மையங்களை நாடு முழுவதும் விரிவுபடுத்தி நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதோடு, கொரனோ வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களும் கண்காணிக்கப்பட்டு, அவர்களும் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

இதனிடையே, கொரனோ வைரஸ் வேகமெடுத்து வரும் நிலையில், கொரனோவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம் மற்றும் கிருமிநாசினிகள், சுவாசக் கருவிகளின் விற்பனை விலையையும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதனால், கள்ள விற்பனையை தடுக்கும் விதமாக, சானிடைஷர் மற்றும் முகக் கவசங்களின் விலையையும் மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.

இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கொரனோ தடுப்பு பொருட்களாக இருக்கும் முகக்கவசம், கிருமிநாசினிகள், சோப்பு போன்றவற்றின் பதுக்கலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிருமிநாசினிகள், சுவாச கோளாறு மற்றும் சிகிச்சைக்கு தேவைப்படும் கருவிகள், செயற்கை சுவாசத்திற்கு தேவைப்படும் கருவிகள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader