IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கொரோனாவினால் கொடைக்கானல் கோடை விழா ரத்து!

Get real time updates directly on you device, subscribe now.

சர்வதேச சுற்றுலாத்தளமும் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறும். கண்ணைக் கவரும் மலர் கண்காட்சியை காணவும், வாட்டிவதைக்கும் கோடை வெயிலை சமாளிக்கவும் நாடு முழுவதும் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் வெளிநாட்டினரும் கொடைக்கானல் செல்வது வழக்கம்.

ஏப்ரல் மே மாதம் சீசனிலும், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் தான் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். எல்லா வருடமும் சுமார் 5 லட்சம் சுற்றுலா பயணிகள் கோக்கர்ஸ் வாக், படகு சவாரி, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்த்து மகிழ்வர்.

ஆனால் இந்த வருடம் கொரோனா வைரஸ் தாக்குதலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொடைக்கானலில் கோடை விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் கொடைக்கானல் சுங்க சாவடி மற்றும் சுற்றுலா தளங்கள் மூலம் அரசுக்கு கிடைக்கும் ரூ.50 கோடி வருவாயும் விடுதிகள், சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்டவற்றின் மூலம் அரசுக்கு கிடைக்கும் ரூ.400 கோடி வருமானமும் இந்த ஆண்டு இல்லாமல் போகிவிட்டது.

கொடைக்கானலில் சுற்றுலா தளத்தையே நம்பி இருக்கும் அப்பகுதி மக்களின் வாழ்வை கொரோனா புரட்டி போட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழல் முடிவுக்கு வந்த பின்னர் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கோடை விழா நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader