IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சென்னையை மிரட்டி வரும் கொரோனா! இன்று ஒரே நாளில் இவ்வளவு பாதிப்பா..?

Get real time updates directly on you device, subscribe now.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,204 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று கொரோனாவால் 509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,839 ஆக உயர்ந்துள்ளது. இன்று 3 பேர் பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை 47 ஆக உயர்வடைந்தது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் இன்று கொரோனாவால் சென்னையில் 509, செங்கல்பட்டு 43, திருவள்ளுா் 47, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி தலா 10, பெரம்பலுார் 9, காஞ்சிபுரம் 8, ராணிப்பேட்டை, விழுப்புரம் தலா 6, அரியலுார், மதுரை தலா 4, தேனி, வேலுார் தலா 3, விருதுநகா் 2, கரூா், கடலுார், திருப்பத்துார், புதுக்கோட்டை, ராமநாதபுரம் தலா 1 என 669 போ் பாதிக்கப்பட்டு உள்ளனா்.

இதன் காரணமாக கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6535 லிருந்து 7 ஆயிரத்தை தாண்டி 7204 ஆக உ்ளளது. கடந்த 3 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரம் ஆயிரமாக தாண்டி வருவது குறிப்பிடத்தக்கது

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader