IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பில்கேட்ஸ் அறக்கட்டளையில் கொரோனா தடுப்பூசி ரெடி! – விஞ்ஞானிகள் பரிசோதனை

Get real time updates directly on you device, subscribe now.

உலகையே உலுக்கி கோரத்தாண்டவம் ஆடும் கொரோனாவை அழிக்க பல்வேறு விஞ்ஞானிகளும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கொரோனாவிற்காக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு INO-4800 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை பில்கேட்ஸ் அறக்கட்டளை சோதனை செய்கிறது.

சீனாவிலிருந்து பரவி இன்று உலகம் முழுவதும் இந்த வைரஸ் பரவி இன்று இலட்சக்கணக்கானோர் பாதிப்படைந்துள்ளனர். அதற்கான மருந்து அல்லது தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணி இரவு பகலாக ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் அதற்கான பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

100 வருடங்களுக்கு முன்னர் காச நோயை குணப்படுத்துவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட பிசிஜி தடுப்பூசியை பயன்படுத்தி கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியுமா என்பது குறித்து விஞ்ஞானிகள் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் INO – 4800 என்ற தடுப்பூசி உருவாக்கப்பட்டு உள்ளது.

தடுப்பூசியை பரிசோதிக்க 40 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் 4 வாரங்கள் இடைவெளியில் தடுப்பூசி போடப்படும். இந்த பரிசோதனையில் வெற்றி கிட்டினால், அடுத்ததாக உலக சுகாதார மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

2020ம் ஆண்டுக்குள் 10 லட்சம் தடுப்பூசிகளை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது. கொரோனா வைரசுக்காக அமெரிக்காவில் பரிசோதனை செய்யப்படும் 2வது தடுப்பூசி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader