போற போக்குல நம்மளயும் கொரோனா டச் பண்ணிட்டு போயிடுச்சு! செல்லூர் ராஜுவின் காமெடி பேச்சு

Get real time updates directly on you device, subscribe now.

போற போக்குலு நம்மளயும் கொரோனா டச் பண்ணிட்டு போய்விட்டது என நடிகர் வடிவேலு பாணியில் அமைச்சர் செல்லூர் ராஜு காமெடியாக கூறினார்.

தமழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி அமைச்சர்கள், எம்.எம்.ஏ.க்கள் மற்றும் மருத்துவர்கள், நடிகர்கள் என அனைத்து தரப்பினருக்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இவற்றில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலர் களத்தில் இறங்கி பணியாற்றுகின்றனர். அமைச்சர்கள் அன்பழகன், செல்லூர் ராஜு, தங்கமணி மற்றும் எம்எல்ஏக்கள் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் தற்போது சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ள அமைச்சர் செல்லூர் ராஜு, சென்னையில் இருந்து மதுரை வந்துள்ளார். அவருக்கு மதுரை பனகல் சாலையில் உள்ள மதுரை மாநகர மாவட்ட அலுவலகத்தில் வைத்து தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

கோரிப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து வரவேற்பு கொடுத்தனர். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, போற போக்கில கொரோனா டச் பண்ணிட்டு போயிருச்சு” என்று வடிவேலு பாணியில் நகைச்சுவையாக கூறினார்.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader