IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ரஷ்யாவில் கொரோனா கோரத்தாண்டவம் – அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

Get real time updates directly on you device, subscribe now.

உலகம் முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ரஷ்யாவில் இதுவரை 675000 என கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா 200 நாடுகளுக்கு மேலாக பரவி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகபட்ச பாதிப்புகளுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் பிரேசில் உள்ளது. இந்நிலையில் ரஷ்யாவில் ஒரே நாளில் 6632 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிரேத்தில் மட்டும் 168 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 10,027ஆக பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,74,515 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோன்று இந்தோனேசியாவில் 1,447 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,447 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சக அதிகாரி அக்மத் யூரியான்டோ தெரிவித்தார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader