IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ராமேசுவரத்தில் தங்கியிருந்த சீனப் பெண்ணுக்கு வைரஸ் பாதிப்பா ?

Get real time updates directly on you device, subscribe now.

ராமேசுவரம் தனியாா் விடுதியில் தங்கியிருந்த சீனப் பெண், மருத்துவ பரிசோதனைக்காக மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

ராமேசுவரம் தனியாா் விடுதியில் சீன நாட்டுப் பெண் தங்கி இருப்பதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து, அரசு மருத்துவா் தாமோதரன் மற்றும் காவல்துறையினா் விடுதிக்குச் சென்று ஆய்வு செய்தனா்.

அப்போது சீனாவின் குணாக்சி மாகாணத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் தங்கி இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, அவருக்கு கொவைட்-19 பாதிப்பு உள்ளதா என பரிசோதனை செய்தனா். இதில் அவருக்கு பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.

எனினும் வருவாய்த் துறையினரின் அறிவுறுத்தலின்பேரில் அந்த பெண் மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டாா்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader