நண்பா நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல மனைவி பூர்ணாவுடன்! வைரலாகும் கல்யாண போஸ்டர்

Get real time updates directly on you device, subscribe now.

உலகமே கொரோனாவை கண்டு பயந்து நடுங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கொரோனா தூக்கி போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா டீ ஷாப், கொரோனா துணிக்கடை எல்லாம் போயி, தற்போது கொரோனா கல்யாணத்தில் வந்து நிற்கிறது. எப்படிப்பட்ட கஷ்டம் வந்தாலும், அதை சர்வ சாதாரணமா எடுத்துகிட்டு, தூக்கி போட்டு தும்சம் பண்ணும் நம்ம ஊரு மக்களின் வெள்ளந்தி குணத்தை என்னவென்று சொல்வது?

நாளைக்கே பூமி அழியப்போகுதுன்னு சொன்னாலும் பதற்றப்பட மாட்டங்க, கவலைப்பட மாட்டாங்க. அப்படி மட்டும் சொல்லிப்பாருங்க. நாளைக்கு உலகம் அழியப்போகிறது என்றால், இன்னைக்கு கறிக்கடையில் கூட்டம் அலைமோதும். போறதே போறோம், போறதுக்கு முன்னாடி கறி சோறு சாப்பிட்டு ஆற அமர போகலாமென்ற மன நிலைக்கு வந்துருவாங்க. அதுதாங்க நம்ம ஊரு மண்வாசனைக்கான பந்தம்.

அதே மைண்ட் செட்டில் இங்கு ஒருத்தருக்கு கல்யாணத்திற்கு அடித்து ஒட்டிய போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வழக்கமான நண்பர்களின் மத்தியில் கல்யாண பத்திரிக்கை அடிக்கும் போது கைதானவர் மாப்பிள்ளை, கைது செய்தவர் மணப்பெண் என சொல்லிவரும். இந்த முறை அதைவிட கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து கொரோனாவை வெச்சி செஞ்சிருக்காங்க.

Your Digital PR

சானிடைசர் சபரி, விலகி இரு விக்னேஷ், இருமல் இளங்கோ, மூச்சுத்திணறல் முத்து, விழித்திரு விஸ்வா, பாசிடிவ் பாண்டி, முகக்கவசம் முனீஸ், கோவிட் கோபி, சுடுநீர் சுரேஷ், அச்சுறுத்தும் அருண் இந்த பெயரை எல்லாம் கேட்டாலே குபீருன்னு சிரிப்பு வருது.

அதற்கும் மேல் போஸ்டரில் உள்ள வாசகங்களை பார்த்தால், நினைத்து நினைத்து சிரிக்க தோணுகிறது. ரொம்ப நாளுக்கு அப்புறம் மனதுக்கு நிறைவான அனுபவத்தை கொடுத்துள்ளது இந்த போஸ்டர். இவங்க கொரோனாவை கிண்டல் பண்ண போஸ்டர் அடிச்சாங்களோ, திருமண தம்பதியை கிண்டல் பண்ண போஸ்டர் அடிச்சாங்களோ தெரியாது.

ஆனால் வானமே இடிந்து விழுந்தாலும் நாங்க அசர மாட்டோம். மனதுக்கு பிடித்ததை செய்துவிட்டு, மன நிறைவோடு வாழும் இனம் நாங்கள் என்பதை நிரூபித்துக்காட்டி விட்டனர். சபாஷ் கொலை வெறி கொரோனா குரூப்ஸ்!

#corona viral invitation #corona group boys #in4net

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More