IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கரோனா பாதிப்பினால் பணப்புழக்கத்தில் சரிவு ஏற்படும் – பொருாளதார ஆய்வறிக்கை

16

Get real time updates directly on you device, subscribe now.

உலகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக நாட்­டில் இருக்கின்ற ­நிறு­வ­னங்­களில் கடுமையான நிதி நெருக்கடி பாதிப்­பு­கள் ஏற்­படக்கூடும் என்றும், அதனால் பணப் புழக்­கத்­தில் ­சரிவு உண்­டா­கும் என்றும், பொருளாதார ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றது.

இந்­திய வர்த்­தக சபை­க­ளின் கூட்­ட­மைப்பு ‘பிக்கி’ மேற்­கொண்ட ஆய்வில் இந்தியாவின் 50 % சத­விகித நிறுவனங்­களின் செயல்பாடுகளில் பாதிப்­பு­கள் ஏற்­படும் என்றும், 80 % சதவிகித நிறுவனங்களின் பணப் புழக்­கத்­தில் சரிவு நிலை உருவாகும் என்றும், தெரிவித்து இருக்கின்றது.

இந்தியா பொரு­ளா­தார வளர்ச்­சி­யில் மந்த நிலையை சந்­தித்து வருவதாகவும் இந்திய பொரு­ளா­தா­ரத்­தில், மேலும் ஒரு கூடுதல் பாதிப்பு என்பது, கரோனா வைரஸ் தொற்றின் மூலமாக உருவாக்கி இருக்கின்றது என்றும்,தேவை மற்றும் வினி­யோ­கம் போன்ற­வற்­றில் கடு­மை­யான இடையூறு­கள் உருவாகும் என்றும், தொழில் வளர்ச்சியில் ஒட்டு மொத்த சரிவுகளை உருவாக்கும் என்றும் தனது ஆய்வறிக்கையில் ‘பிக்கி’ நிறுவனம் தெரிவித்து இருக்கினறது.

Related Posts
1 of 4

கரோனா தொற்றின் தாக்­கு­தல் காரணமாக, ­பெரும்பாலான நிறுவனங்கள் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் இந்திய நாட்டின் ஒட்டுமொத்த அளவிலான பணப் புழக்­கத்­தில் சரிவு ஏற்­படும் என்றும் தெரிவித்து இருக்கின்றது.

இந்தியா முழுவதிலும், பொருட்­கள் மற்­றும் சேவை­க­ளின் தேவை மற்றும் வினி­யோ­கம் போன்ற­வற்­றின் மீது நேரடி தாக்­கம் ஒரு­ பு­றம் இருந்தாலும், ­பொரு­ளா­தார செயல்­பா­டு­கள் குறைந்து வரு­வ­தன் காரணமாக, பணப் புழக்­க நிலைகளிலும், பெரும் பாதிப்பை உருவாக்கும் என்றும், அதன் மூலமாக பெரும் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உரு­வாகி இருக்கின்றது என்றும், நாடு முழுவதிலும், ஊழி­யர்­க­ளுக்­கு உண்டான ஊதியம், வட்டி, கடன்களை திரும்பச் செலுத்துவது போன்ற அனைத்­தி­லும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கின்றது என்றும் ‘பிக்கி’ அமைப்பு தனது ஆய்வறிக்கையில் தெரிவித்து இருக்கின்றது.

மேலும் இது போன்ற சூழலில் இந்திய ரிசர்வ் வங்கி, இந்தியாவின், பொரு­ளா­தா­ர மற்­றும் தொழில் துறை நடவடிக்கையை ஆத­ரிக்கின்ற நோக்கத்தில், 1 % சதவிகிதம் அளவிற்கு வட்டி குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் ‘பிக்கி’ அமைப்பு கோரிக்கை விடுத்து இருக்கின்றது.

Get real time updates directly on you device, subscribe now.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More