IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கொரோனாவை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது – விஜயபாஸ்கர் தகவல்

Get real time updates directly on you device, subscribe now.

தமிழகத்தில் ஒரே நாளில் 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,448ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 552 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, மொத்த எண்ணிக்கை 7672ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரை 1922 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 58 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 5691 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் சுமார் 85 லட்சம் மக்கள் தொகை உள்ளதால் கொரோனா வைரஸ் தடுப்பு பணி சவாலாக இருப்பதாகவும், சென்னையில் வைரஸ் பரவலை முற்றிலும் தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் தேவை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியவாணி முத்துநகரில் இந்திய ஹோமியோபதி மற்றும் சித்த மருத்துவதுறை சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், கடந்த 3 நாட்களாக சென்னையின் 31 வார்டுகளில் ஒருவருக்கு கூட புதிதாக பாதிப்பு ஏற்படவில்லை என்றார். சென்னையில் நோய்த்தொற்று அதிகமுள்ள தண்டையார் பேட்டை, திருவிக நகர், இராயபுரம், கோடம்பாக்கம் ஆகிய நான்கு மண்டலங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader