IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சந்தேகத்தால் மனைவியை உயிரோடு கொளுத்தினேன்! கைதான பரோட்டா மாஸ்டர் பரபரப்பு வாக்குமூலம்!!

18

அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டே இருந்ததால் சந்தேகப்பட்ட கணவன், மனைவியை பெட்ரோல் ஊற்றி கொளுத்திக் கொலை செய்துள்ளார்.


மதுரை தெப்பக்குளம் பகலவன் நகரை சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது 38). இவர் அதே பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லதா (வயது 33). இவர் அங்குள்ள பிளாஸ்டிக் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு மகாலட்சுமி (வயது 13) என்ற மகளும், கார்த்திக்பாண்டி (வயது 8) என்ற மகனும் உள்ளனர்.


காளீஸ்வரனுக்கும் லதாவிற்கும் அடிக்கடி சண்டை நடந்து கொண்டேதான் இருக்குமாம். லதா வேலை பார்ப்பதால் அவரின் மேல் காளீஸ்வரனுக்கு சந்தேகம் இருந்துள்ளது. இதன் காரணமாகவே தகராறும் ஏற்படுமாம். நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, அவ்வப்போது மனைவியுடன் காளீஸ்வரன் சண்டை போட்டுள்ளார்.


இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறின்போது காளீஸ்வரன் லதாவை பயங்கரமாக தாக்கியுள்ளார். சண்டைக்குப் பின்னர், காளீஸ்வரனும், கார்த்திக்பாண்டியன் ஒரு அறையிலும், லதா மற்றும் மாகலட்சுமி இருவரும் ஒரு அறையிலும் தூங்கச் சென்றுவிட்டனர்.


இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை 5 மணியளவில் காளீஸ்வரன், மனைவி லதா மற்றும் மகள் மகாலட்சுமி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தியதாக தெரிகிறது. பின்னர் வீட்டை விட்டு தப்பிவிட்டார். லாதவும், மகாலட்சுமியும் தீ எரிச்சல் தாங்க முடியாமல் கத்த தொடங்கினர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தைச் சேர்ந்தவர்கள் விரைந்து வந்தனர். தீக்காயங்களுடன் இருந்த தாய், மகளை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் லதா பலியானார். சிறுமி மகாலட்சுமி தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக தெப்பக்குளம் போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான காளீஸ்வரனை லைவீசி தேடி வந்தனர்.


இந்நிலையில், மதுரை பகலவன் நகரில் பதுங்கியிருந்த பரோட்டா மாஸ்டர் காளீஸ்வரனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் காளீஸ்வரனை கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: எனது மனைவி லதா செல்போனில் அடிக்கடி பேசி கொண்டே இருப்பாள். அதனால் எனக்கு அவள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவளிடம் செல்போனில் பேசுவதை குறைக்குமாறு பல முறை கண்டித்தேன். ஆனாலும் அவள் கேட்கவே இல்லை. இதன் காரணமாக எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். என் மகள் அப்போது லதாவுக்கு ஆதரவாகவே பேசி வந்தாள். சமபவத்தன்றும் சண்டையின்போது மகாலட்சுமி லதாவுக்கு ஆதரவாக பேசினாள். எனவே அவர்கள் இருவரின் மீது ஆத்திரம் வந்தது. இருவரையும் தீர்த்து கட்ட வேண்டும் என முடிவு செய்து பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விட்டேன், என்று அவர் கூறியுள்ளார்.

#muder #husband #wife #daughter # maudurai #Confessions