IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மாஸ்க், சானிடைசர் விற்பனையை ஓவர்டேக் செய்த ஆணுறை விற்பனை

110

Get real time updates directly on you device, subscribe now.

கொரனோ வைரஸினால் மாஸ்க் மற்றும் சானிடைசர்கள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவினால் தற்போது ஆணுறை விற்பனை அதிகரித்துள்ளதாக மருந்துக்கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரனோ பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. யாரும் வீடுகளை விட்டு வெளியேற கூடாது, சமூக தனிமைப்படுத்துதல் அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts
1 of 4

கொரனோவில் இருந்து தவிர்க்க அனைவரும் மாஸ்க் அணிந்து வருகின்றனர். மருந்துக்கடைகளில் அதிகளவில் விற்பனை செய்ய பலரும் அவற்றை வாங்கி குவித்துள்ளனர்.

மாஸ்க்குகள், சானிடைசர்கள் அதிகளவு விற்று தீர்ந்தன. அதற்கு தட்டுப்பாடும் அதிகமானது. ஆனால் அந்த விற்பனையை தூக்கி சாப்பிடும் அளவிற்கு வேறு ஒரு பொருள் விற்பனையாகி அசர வைத்திருக்கிறது.

அது தான் ஆணுறை விற்பனை. அதிலும் அதிக எண்ணிக்கை கொண்ட ஆணுறை பாக்கெட்டுகளை பலரும் வாங்கி செல்வதாக மருந்துக் கடைக்காரர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டதாக கடைக்காரர்கள் தெரிவித்து உள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More