சிறுமியை கட்டாய திருமணம் செய்த தாய்மாமன் கைது!

Get real time updates directly on you device, subscribe now.

சிறுமியை கட்டாய திருமணம் செய்து கொடுத்ததில் தாய்மாமன் உட்பட 8 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கைது செய்தவர்களில் 2 வாலிபர்கள் ராணுவ வீரர்கள் ஆவார்கள்.


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் சிவசாமி (வயது 29). இவர் தனது சொந்த அக்கா மகளை ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். இதன் பிறகு இருவரும் கூட்டுக் குடும்பமாக வசித்துள்ளனர்.


16 வயது சிறுமியை 3வது திருமணம் செய்த ரோமியோ

இந்நிலையில் கணவன் மனைவிக்கு அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று வாக்குவாதம் அதிகமானதால் அந்த பெண் கோபத்தில் தாயார் வீட்டிற்கு வந்துவிட்டார். எனவே அவரை சமாதானம் செய்து அழைத்து செல்ல அக்கா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவர் மனைவியுடன் பேச்சு வார்த்தை நடத்தியும் அவருடன் செல்ல மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சிவசாமி நண்பர்களுடன் வந்து மனைவியை வலுக்கட்டாயமாக கடத்தி கொண்டு ஊருக்கு சென்றுள்ளார்.


இதை பார்த்த பெண்ணின் தாயார் தனது மகளை கடத்தி செல்கிறார்கள் என கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக போலீசார் விரைந்து சென்று திருநகர் அருகே காரை மடக்கி பிடித்தனர். பின்னர் காரில் இருந்த பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது அவர் கூறும் போது தனக்கு வயது 16 என்றும், தன்னை கட்டாயப்படுத்தி சிவசாமி திருமணம் செய்து கொண்டார் எனவும் கூறினார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சமூகநலத்துறை அதிகாரி ராஜேஸ்வரி, மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.போலீசார் புகாரின் பேரில் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கட்டாய திருமணம் செய்த தாய்மாமன் சிவசாமி (வயது 29), இதற்கு உடந்தையாக இருந்த பெண்ணின் தாயார், சிவசாமியின் நண்பர்கள் மற்றும் உறவினர்களான வைரவன் (வயது 34), அஜித் (வயது 24), கோபிநாத் (வயது 26), பாரதி (வயது 27), அருண்குமார் (வயது18), பூவேந்திரன் ஆகிய 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் அஜித் மற்றும் கோபிநாத் இருவரும் ராணுவ வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

#Childmarriage #madurai #mother #pocso act

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More