மகிழ்ச்சி அலையில் விழுங்கிய காமெடி சுனாமி உள்ளத்தை அள்ளித்தா..!

Get real time updates directly on you device, subscribe now.

படம் ஆரம்பம் முதல் கடைசி வரை கண்ணீர் வர சிரிக்க செய்த படம், உள்ளத்தை அள்ளித்தா! சபாஷ் மீனா மற்றும் அந்தாஸ் அப்னா அப்னா என்ற, ஹிந்தி படம் ஆகியவற்றில் இருந்து, பல காட்சிகளை உருவி உருவாக்கப்பட்டது தான், இப்படம். ஆனால், கலவை சரியாக இருந்ததால், படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

கார்த்திக், தன் தந்தை ஜெய்கணேஷின் கண்டிப்பு பிடிக்காமல், வீட்டில் இருந்து வெளியேறி, ஊட்டிக்கு செல்கிறார். அங்கு, திருடனான கவுண்டமணியுடன் நட்பு பாராட்டுகிறார். ஊட்டியிலேயே பெரும் பணக்காரரான மணிவண்ணன் வீட்டில், டிரைவராக வேலைக்குச் சேர்கிறார், கார்த்திக். மணிவண்ணனின் நண்பரான ஜெய்கணேஷ், ஊட்டிக்கு வருகிறார்.

இந்நிலையில், மணிவண்ணனைப் போலவே அச்சு அசலான தோற்றத்தில் இருக்கும் அவரது சகோதரரால், ஆள்மாறாட்டம் நடக்கிறது. அனைத்து கதாபாத்திரங்களும், ஒரே வீட்டுக்குள் ஒளிந்து ஆடும், கண்ணாமூச்சி ஆட்டம் தான், வயிறு வலிக்க சிரிக்க செய்த, உள்ளத்தை அள்ளித்தா படத்தின் கதை.

இப்படத்தில் கார்த்திக், கவுண்டமணி என இருவருமே கதாநாயகர்கள் தான். இப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது, விஜய். ஆனால், வாய்ப்பு கைநழுவியது. ரம்பா, இப்படத்திற்கு பின் முன்னணி நடிகையானார். மணிவண்ணன், வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராகப் பிரகாசிக்க ஆரம்பித்தார்.

பாடலாசிரியர் பழனிபாரதி, இசையமைப்பாளர் சிற்பி ஆகியோர், ‘பிசி’யாகி விட்டனர். ‘ஐ லவ் யூ, அழகிய லைலா, சிட்டு சிட்டு குருவிக்கு…’ போன்ற பாடல்கள், வெகு பிரபலமாயின. இப்படம், வீடேவதண்டி பாபு என, தெலுங்கிலும்; கலேட் அலியாண்ட்ரு என, கன்னடத்திலும், ‘ரீமேக்’ செய்யப்பட்டு மக்களை சந்தோஷசத்தில் ஆழத்தியது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More