IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தியின் கடைசி நிமிடங்கள்

Get real time updates directly on you device, subscribe now.


தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான கிருஷ்ணமூர்த்தி இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார்.


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் வடிவேலுவுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தவசி படத்தில் எக்ஸ்க்யூஸ்மி, ஒசாமா பின்லேடன் அட்ரஸ் தெரியுமா ? என்ற நகைச்சுவை காட்சி ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மற்றும் எல்லாம் அவன் செயல் படத்தில் வடிவேலுவை அரசியல் மீட்டிங்கில் சைக்கிளில் அழைத்துச் செல்லும் காட்சி நல்ல வரவேற்பை பெற்றது.


கிருஷ்ணமூர்த்தி நகைச்சுவை நடிகராக மட்டும் அல்லாமல் புரொடக்சன் மேனஜராகவும் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி தேனி மாவட்டம் குமுளிக்கு படப்பிடிப்பு ஒன்றிற்கு சென்றிருந்தார்.

அப்போது தீடிரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே படக்குழுவினர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே கிருஷ்ணமூர்த்தியின் உயிர் பிரிந்துள்ளது.


இவர் நடித்த படம் ஒன்றில், சொர்க்கத்திற்கு சைக்கிளில் போவோம் என நகைச்சுவையாக பேசியிருப்பார். ஆனால் இவர் உண்மையிலேயே ரசிகர்களை பிரிந்து சொர்க்கத்திற்கு சென்றுவிட்டார். இவரது மறைவு திரை பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader