IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இப்படியும் கூட போதைப்பொருள் கடத்துவார்களா ? பெண் ஒருவர் கைது

Get real time updates directly on you device, subscribe now.


சூர்யா நடித்த அயன் படத்தில் வருவது உடலில் மறைத்து போதைப்பொருளை கடத்தியவர் கொலம்பியா விமான நிலைய போலீஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கொலம்பியாவின் எல்டோரடா விமான நிலையத்தில் பயணிகள் அனைவரும் வெளியேறும் பகுதியில் பெண் ஒருவர் நடக்க முடியாமல் மெதுவாக அடியெடுத்து நடந்து வந்தார். அவரைப் பார்த்தம் விமான நிலைய அதிகாரிகள் என்னவென்று விசாரித்தனர். அதற்கு தனக்கு காலில் தையல் போட்டுள்ளதால் நடக்க முடியவில்லை என்றார். இருப்பினும் அவர்மீது போலீசாருக்கு சந்தேகம் வரவே அதிகாரிகள் அவரை சோதனை செய்தனர்.


அவரது இடதுகாலை ஸ்கேன் செய்து பார்த்த போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அவரது தொடையில் தையல் போட்ட பகுதியின் உள் மேல் சதைக்கு கீழ்ப்புறம் பிளாஸ்டிக் கவர் போன்ற பொருள் இருந்துள்ளது. அதனை பிரிக்க அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அறுவை செய்து அந்த பொருளை வெளியே எடுத்தனர்.


பின்பு அது திரவ வடிவிலான போதைப்பொருள் என தெரியவந்துள்ளது. பின்பு அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து கைதான பெண்ணின் பின்னணியில் யார் இருக்கிறார்கள், போதைப்பொருளை அவர் எங்கு கொண்டு செல்கிறார் என்பது குறித்து விமான நிலைய போலீசார் கைதானவரிடம் விசாரனை செய்து வருகின்றனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader