IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

குளிர் கால உணவு முறைகள்

Get real time updates directly on you device, subscribe now.

மழைக்காலமும், குளிர்காலமும் மனதுக்கு இதமானவையாகும். ஆனால் ஆஸ்துமா உள்ளிட்ட வியாதிகள் இருப்பவர்களுக்கு கடும் பாதிப்பாக அமையும். இந்த காலத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய மற்றும் சத்தான உணவை உட்கொள்வது மிகவும் சிறந்ததாகும். இவ்வாறான உணவு எடுத்துக்கொண்டால் உடல்நல பாதிப்பை தவிர்க்க முடியும்.

குளிர் காலங்களில் நாம் உட்கொள்ளும் உணவுகளை சிறந்த ஊட்டச்சத்து நிரம்பியவைகளாக தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். குளிர் காலங்களில் ஏற்படும் ஜலதோஷம், காய்ச்சல் போன்ற நோய்களிடம் இருந்து பாதுகாத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

உணவில் சரியான அளவு காய்கறிகளை சேர்த்து கொள்ள வேண்டும். இவை தேவையான சக்தியை அளித்து குளிர்காலத்தை சமாளிக்க உதவும். அதிகளவில் கீரைகளையும், கேரட் மற்றும் பீட்ரூட் போன்ற காய்களை சாப்பிடுவது நல்லது. சிறு தானியங்களை சேர்த்து சப்பாத்தி செய்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பது நல்லது.

குளிர்காலங்களில் சரியான உணவுமுறையை பெறுவதற்கும் தேவையான பிராண வாயுவை உட்கொள்வதற்கும் வேர்க்கடலை சிறிதளவு உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பாதாம் பருப்பு அதிகளவில் பலன் தரக்கூடியது. இதன்மூலம் குளிர்காலங்களில் ஏற்படும் மலச்சிக்கலை தவிர்க்க முடியும்.

உணவில் இனிப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளக்கூடாது. எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடக் கூடாது. இரவு உணவில் பச்சைப் பயறு, கேழ்வரகு ஆகியவற்றை சேர்க்க வேண்டாம். சிலருக்கு மழைக்காலத்தில் எலுமிச்சம் பழம் மற்றும் ஆரஞ்சு ஜுஸ் சாப்பிட்டால் ஒத்துக் கொள்ளாது. அவர்கள் இவற்றை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

#Cold #weather #Food #Systems

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader