IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கோவையில் பார்பிக்யூ நேஷன் இரண்டாவது கிளை துவக்கம்

Get real time updates directly on you device, subscribe now.


இந்தியாவின் முன்னணி உணவகத்தொடரை கொண்டுள்ள பார்பிக்யூ நேஷன், கோவையில் தனது இரண்டாவது கிளையை துவக்குகிறது. பீளமேடு, பன் ரிபப்ளிக் மாலில், 3800 சதுரடியில் இது அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ளோருக்கு சைவ, அசைவ கிரில் உணவை ருசிக்க, நேரடி பார்வையில் சமைத்து பரிமாறப்படுகிறது. ஒரே சமயத்தில் இங்கு 138 பேர் அமர்ந்து சாப்பிட வசதி உள்ளது.


எவ்வளவு வேண்டுமானாலும், எதுவேண்டுமானாலும் சாப்பிட வசதியாக பபட் முறையிலான பார்பிக் நேஷனில், சைவ, அசைவ உணவுகள் உள்ளன. அசைவம் விரும்புவோர், சில்லி கார்லிக் பிரான்ஸ், கரிபியன் சிக்கன், பார்ஸ்லே பிஷ், அங்காரா டாங்டி, கோஸ்ட் பெஷ்வாரி சீக் மற்றும் பிற உணவுகளை ருசிக்கலாம். சைவ உணவு வகைகளில், ஜப்ரானி பனீர் டிக்கா, சட்பட்டா அனாரஸ், மெக்ஸிகன் மஸ்ரூம், கஜூன் ஸ்பைஸ் பொட்டாட்டோ, கிரிஸ்பி கார்ன் போன்றவையும் அடங்கும்.


மேலும், குழி பணியரம், பாஸ்தா, சைவ பட்டர் சாட்டே, பாவ் பாஜி, சாட், தோசை போன்றவைகளயும் உள்ளன. அசைவ வகையில், வாத்து, வான்கோழி, முயல், காடை மற்றும் பல உள்ளன. பிரியாணி வகைகள், நுாடுல்ஸ், இந்தியன் ரொட்டிகள் மற்றும் கறி வகைகளும் உள்ளன.


உணவு வகைகளில் கேசரி பிர்னி, குலாப் ஜாமூன், சீஸ் கேக், செலிப்ரேஷன் பாஸ்ட்ரி, பிரஷ் புரூட் காடக்ஸ், சாக்லேட் பிரவ்னி, ப்ரூட் டார்ட் மற்றும் சாக்லெட் டார்ட் ஆகியவை உள்ளன. குல்பி நேஷன் கவுன்ட்டரில், பல்வேறு வகையான மணம், சுவையில் ஐஸ்க்ரீம்களை சுவைக்கலாம்.


பார்பிக் நேஷன் ஹாஸ்பிடாலிட்டி லிமிடெட் நிறுவனத்தின் அரூப் சட்டர்ஜீ, நிர்வாக துணை தலைவர் கூறுகையில், ‘‘ கோவையில் இரண்டாவது விற்பனையகத்தை துவக்குவதில் பெருமைப்படுகிறோம். பசியை துாண்டும் உணவு வகைகளை கவர்ச்சிகரமான முறையில் புதிய அனுபவத்தை எங்களது விருந்தினர்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த பகுதியில் உள்ள அனைவரையும் வரவேற்கிறோம். சுவையான உணவை சமைத்து பரிமாற வாய்ப்பளிக்க வேண்டுகிறோம்.’’ என்றார்.


பார்பிக் நேஷன், ‘நீங்களே செய்து பாருங்கள்’ ‘DIY’ (do-it-yourself) என்ற புதுமையான முறையில் முன்னணி செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. மேலும், இங்கு மத்திய நாடுகள், அமெரிக்கா, ஆசியா, ஓரியண்டல் மற்றும் இந்திய உணவு வகைகள் இடம் பெற்றுள்ளன. வாடிக்கையாளர்கள், மரினாட்ஸ் மற்றும் சாஸ் வகைகளை தங்களது மேசையிலேயே செய்து மகிழ்ச்சியுடன் சாப்பிடலாம். பாரம்பரிய, கலை நயமிக்க உணவகத்தின் சூழலில், சுவையான சூடான உணவுகளை நேரடியாக உண்ண முடியும். மேலும் தொடர்புக்கு 7024123576 – 7024123585 என்ற எண்களை தெடர்பு கொள்ளவும்.


#Coimbatore #second branch #Barbecue Nation #Open

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More