IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கோவை ரேஸ்கோர்ஸ்சில் ஃபேப் கபே துவக்கம்

Get real time updates directly on you device, subscribe now.

இந்தியாவின் பாரம்பரிய சமையல் ஃபேப்கபே – ன் மண்டல அளவிலான விரிவாக்க திட்டத்தின் ஒரு பகுதியாக பேப்இன்டியா ஓவர்சீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றுமொரு கிளை கோவை நகருக்கு வருகிறது. ஏற்கனவே வெற்றிகரமாக செயல்பட்டு வரும் கோவை நகரில் உள்ள கிளையோடு இப்புதிய கிளை, நாட்டின் 19 வது கிளையாகும். கோவையின் மையப்பகுதியில் இருக்கும் இந்த நகரம், புதிய விருந்துண்ணும் அனுபவத்தை தரும்.


இங்கு அமர்ந்து சாப்பிடும்போதும், பானங்களை அருந்தும்போதும் கிடைக்கம் அனுபவம் என்றும் மறக்க முடியாது. 809 சதுரடியில் காற்றோட்ட வசதியுடன், இயற்கையான ஒளியும் அமைதியான சூழல் புதுமையானது. இந்திய கைத்தறி ஜவுளி, பர்னிச்சர் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. உடல் நலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான உணவு வகைகளை பரிமாறுவதே பேப் கபேயின் சிறப்பு.


நாடு முழுவதும் உள்ள இந்திய உணவு வகைகளையும், புதுமையான சலாட் மற்றும் சாட் வகை உணவுகளை தருகிறது. பசையற்ற உணவுகள், சைவ உணவு, மற்றும் பசையுள்ள பொருட்களையும் விருப்பத்திற்கு ஏற்ப பரிமாறுகிறது. இந்த உணவகம் காலை 8.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை திறந்திருக்கும். நண்பர்களுடன் மதிய உணவு, குடும்பத்தினருடன் இரவு உணவு அல்லது ஒரு கப் காபி சாப்பிட என எந்த மணி நேரத்திலும் பேப்கபேவுக்கு வரலாம்.


பேப்இன்டியா பேப்கபே பிராண்ட் தலைவர் ரெபாகா பிளான்க் கூறுகையில், ‘‘ ஆரோக்கியமான, வசதியான ஆரோக்கியமான உணவு வகைகளை தயார் செய்து தருகிறோம். துாய்மைப்படுத்தப்பட்ட எண்ணெய் வகை, சர்க்கரை மற்றும் செயற்கை மணமூட்டும் பொருட்களை பயன்படுத்துவதில்லை என்பதில் அதிக கவனம் செலுத்துகிறோம். மாற்றாக, இயற்கையான நெய், இந்திய முழு தானியங்கள், இனிப்புகளையே பயன்படுத்துகிறோம். பொருட்களை எங்களது பங்குதாரர் நிறுவனமான ஆர்கானிக் இன்டியாவிலிருந்து பெறப்படுகிறது.


பேப் கபேயில் நான் விரும்பும் ஒரே அம்சம், ‘எந்த நேரத்திலும், என்ன வகை உணவு வேண்டுமானாலும் கிடைக்கும் என்பது தான். ஒவ்வொரு மணி நேரத்திலும் மகிழ்வாக சாப்பிட, தெருவோர உணவு வகை முதல் உயர்தர உணவு வகை வரை, சலாட், காபி போன்றவையும் இங்கு கிடைக்கும்,’’ என்றார்.


பேப்கபேயில் காலை உணவு, இட்லி,சாம்பாம் எந்த நேரத்திலும் கிடைக்கும். அதோடு பொடியும் இருக்கும். குறைவான கலோரி உப்புமா மற்றும் குறைவான கார்போ ஹைட்ரேட் உணவுகள், கேரட் மற்றும் பட்டாணி பீன்ஸ் உணவு வகைகள் கிடைக்கும். வாழைப்பழ டாப்பிங், வறுத்த பாதம் பருப்பு, தேங்காய் ஐஸ்க்ரீம், நிலக்கடலை வெண்ணெய் மற்றும் பனங்கற்கண்டு பானம் போன்றவைகளும் கிடைக்கும்.


சலாட் பகுதியில், பல்வேறு இந்திய வகை உணவுகள் கிடைக்கும். விரைவாக பசியாற லேசான உணவுகள் உள்ளன. சிக்கன் டிக்கா சலாட், கொய்னா பவர்ஹவுஸ் சலாட், சகர்காந்தி தர்பூசணி கோடை கால சலாட் உள்ளிட்டவை இங்குள்ள சிறப்பம்சங்கள். டிரையோ பாப்ரி சாட், நோ கில்ட் கோல் கப்பாஸ், சூப்பர் டிக்கி சாட், கிளாசிக்கல் சிக்கன் மமோஸ், போன்றவைகளும் சிறப்பான முறையில் தயார் செய்யப்படுகிறது.


இவை தவிர, கடற்கரை மீன் மொய்லி, கிளாசிக்கல் சாக் பனீர், பிரியாணி, கேட்டோ பிரியாணி, கொய்னா பிரியாணி, பாசுமதி அரிசி பிரியாணி போன்றவைகளும் சிறப்பாக செய்து தருகிறோம். குளிர்பானங்களில் கோகும் கோகனட் கூலர், பாதம் தண்டை, ஸ்மூத்திஸ் அன்ட் ஷேக்ஸ், பேரி பிளாஸ்ட், கொம்புச்சா, மெதுவான அழுத்தத்தில் தயாரான ஜூஸ், க்ளோ ஹைட்ரேஷன், காபி உள்ளிட்ட பானங்கள் சிறப்பானவை. உணவுக்குப்பின் டெசர்ட் ஐஸ்க்ரீம் இல்லாமல் நிறைவு பெறாது விருந்து. எனவே, வாழைப்பழ கேக், ஹிமாலயன் தேன், வால்நட் டார்ட், சாக்லேட் கேக் போன்றவை தனிச்சிறப்புடன் தயாரித்து தருகிறோம்.

#Coimbatore #Racecourse #Fab Cafe #Launch

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader