IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கோவையில் பதாம் வாரியம் சார்பில் நலம் பேணல் கருத்தரங்கு

0 22


இந்திய பாரம்பரிய உணவுகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இடம் பிடித்திருந்த பாதாம் பருப்பின் பயன்கள் பற்றி, பல ஆயுர்வேத, யுனானி மற்றும் சித்த மருத்துவத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவரது தினசரி உணவு பழக்கத்தில் பாதம் பருப்பு வகைகளால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆய்விலும் அறிவியல் ரீதியான ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மாறி வரும் பரப்பான நகர வாழ்க்கை முறையில், முறையான, சத்தான உணவு பழக்கத்தில் பாதம் பருப்பின் பங்கு மிக முக்கியமானது.


இது குறித்த கருத்தரங்கில், பேஷன் மாடல், உடல் வடிவமைப்பாளர் டாக்டர் ஜெயா மகேஷ் மற்றும் நுண்ணுாட்டச்சத்து மற்றும் உடல்நல ஆலோசகர் ஷீலா கிருஷ்ணசாமி ஆகியோர் விரிவான விளக்கம் அளித்தனர். வாழ்க்கையில் நலமுடன், வளமுடன் வாழ உணவு பழக்க வழக்கங்களில் மேற்கொள்ள வேண்டிய முறைகள் பற்றி பகிர்ந்தளித்தனர். அதோடு தங்களது வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அறிவியல் ரீதியான முன்னேற்றங்கள் குறித்தும் பேசினர். குறிப்பாக, உடல் நலம், வாழ்க்கை முறை மாற்றம், எடை மேலாண்மை, ரத்த சர்க்கரை அளவு மேலாண்மை மற்றும் இருதயத்தின் நலம் பேணுதல் பற்றி விளக்கினர்.


எடை மேலாண்மை:


இந்தியாவில் 4% மேற்பட்டோர் உடல் பருமனால் அவதிப்பட்டு வருகின்றனர். இது, இந்திய மக்களின் உடல் நல பிரச்னையாக உருவாகி வருகிறது. இந்த எடை பிரச்னைக்கு தீர்வாக பாதம் சாப்பிடுவது பயனளிக்கும். தாவர புரதம் அதிகம் கொண்ட பாதம், பசி உணர்வை சீராக்குவதோடு, கட்டுப்படுத்துகிறது. பாதம், எளிதான, முறையான செரிமானத்தை தரும் நார்ச்சத்து மிக்கது. இவை உடல்


எடை மேலாண்மையில் முக்கியத்துவம் வாய்ந்தது.


எடை மேலாண்மை குறித்து டாக்டர் ஜெயா மகேஷ் கூறுகையில், ‘‘ உடல் எடை என்பது ஒருவரது உடல் நலம் மட்டுமல்ல, ஒருவரது முழு நலனையும் பாதிக்கக் கூடியது. பாதம் சாப்பிடுவதால், எடையை மேலாண்மை செய்வதோடு மட்டுமின்றி, பசி உணர்வை கட்டுப்படுத்தி, வயிறு நிறைந்திருப்பது போன்ற உணர்வைத்தரும். ஒவ்வொரு நாளும் 42 கிராம் அளவுக்கு பாதம் சாப்பிடுவதால், வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பு குறைவதுடன், இடுப்பின் அளவும் குறையும். பசி உணர்வு ஏற்படும்போதெல்லாம், ஆரோக்கியமில்லாத சிற்றுண்டிகளுக்கு பதிலாக, பாதம் பருப்பை ஒரு சிறிய பெட்டியில் எடுத்துச் சென்று சாப்பிடலாம். எடையும் குறையும்,’’ என்றார்.


ரத்த சர்க்கரை அளவு மேலாண்மை:


ரத்த சக்கரை அளவை மேலாண்மையில், 2 வது வகை சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பாதம் பெரிதும் உதவுகிறது. ஏ1சி ஹீமோகுளோபின் அளவை குறைத்து ரத்த அளவை கட்டுப்படுத்துகிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. உணவு பழக்கத்தில் ஒரு பகுதியாகவும், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதிலும், இருதய நோயிலிருந்து பாதுகாக்கவும் இது உதவுகிறது.


நுண்ணுாட்டச்சத்து மற்றும் உடல் நல ஆலோசகர் ஷீலா கிருஷ்ணசாமி கூறுகையில், ‘‘ நவீன வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படும் நோய்களில் சர்க்கரை நோயும் ஒன்று. உடல் நலத்தை சீராக வைத்துக்கொள்வதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். தினமும் உடல் பயிற்சியுடன், சரியான நேரத்தில் துாங்கி எழ வேண்டும். மன அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும். இதை மேலாண்மை செய்ய பலருக்கும் உதவிகள் தேவைப்படுகிறது. உணவு முறை மேலாண்மையில், ஆரோக்கியமான உணவுகளை குறிப்பாக, பாதம், சலாட் மற்றும் முளைகட்டிய பயிறு வகைகள் போன்றவை இருதய நோய் வராமல் தடுக்க உதவுகிறது,’’ என்றார்.


இருதய நலனும் பாதம் பருப்பும்:


இந்தியாவில் நிகழும் இறப்புகளில் 28% மாரடைப்பால் நிகழ்கிறது. இந்தியாவில் மாரடைப்புக்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம். பாதம் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் குறித்த ஆய்வுகளில், ரத்தத்தில் கொழுப்பின் அளவை மேலாண்மை செய்ய இது பெரிதும் உதவுகிறது. ஒட்டுமொத்த கொழுப்பை குறைப்பதோடு, கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது.


சமையலில் பதாம் பயன்படுத்துவது குறித்து சமையல் கலை நிபுணர் அமர் கூறுகையில், ‘‘ அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கும் ஒரு உணவு பொருள் பாதம். இது அனைத்து சிற்றுண்டிகளிலும் சேர்க்கலாம். ஒவ்வொரு விழாக் காலங்களிலும் பாதம் பருப்பை பயன்படுத்தி பல உணவுகளை தயாரிக்கலாம். இரவு அல்லது காலை சிற்றுண்டியுன் பாதம் சேர்த்துக் கொள்ளலாம்,’’ என்றார்.


கலிபோர்னியாவிலிருந்து கிடைக்கும் பாதம், இயற்கையானது; தரமான உணவு. சந்தைப்படுத்துதல், பயிரிடுதல் போன்றவைகளை கலிபோர்னியாவில் உள்ள பதாம் வாரியம் மேற்கொண்டு வருகிறது. இதில், 7600 விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். 1950ம் ஆண்டில் மாடெஸ்கோவில் இது துவக்கப்பட்டது. இங்குள்ள விவசாயிகளின் நலன் காக்க பயிரிடுவோர் நல சந்தைக் கூட்டமைப்பு, அமெரிக்காவின் வேளாண்மை துறையால் கண்காணிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு: www.almonds.in என்ற இணையதளத்தை அனுகவும்.


இந்த கருத்தரங்கில் பேஷன் மாடல், உடல் வடிவமைப்பாளர் டாக்டர் ஜெயா மகேஷ் மற்றும் நுண்ணுாட்டச்சத்து மற்றும் உடல்நல ஆலோசகர் ஷீலா கிருஷ்ணசாமி ஆகியோர் கலிபோர்னியா பதாம் வாரியத்தின் மண்டல இயக்குனர் சுதர்ஷன் முஸ்ம்டர் ஆகியோர் உள்ளனர்.


#Coimbatore #healthy #lifestyles #change #Batham