புரோக்கர்கள் பிடியில் கோவை மாநகராட்சி! அலர்ட் ஆகுமா லஞ்ச ஒழிப்பு போலீஸ் ?

Get real time updates directly on you device, subscribe now.

கோவை மாநகராட்சி வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக புகுந்து விடிய விடிய சோதனை நடத்தினர்.‌ இதில் கணக்கில் வராத 86,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 10 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். வட்டாட்சியர் அலுவலகத்தை தொடர்ந்து கோவையில் உள்ள மேலும் சில அரசு அலுவலகங்களில் லஞ்ச விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் குவிந்து வருகிறது.

குறிப்பாக டாடாபாத்தில் உள்ள உள்ளூர் திட்ட குழுமம் அலுவலகம், கோவை மாநகராட்சி அலுவலகங்கள் மீது பொதுமக்கள் லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் தெரிவித்துள்ளனர். மாநகராட்சியின் மூத்த பொறியாளர் ஒருவர், புரோக்கர்கள் சிலரின் பெயர் பட்டியல் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கட்டட வரைவு அனுமதி, விதிமுறை மீறல் கட்டடங்கள், அனுமதி பெறாத மனைகள், கட்டடங்கள் போன்றவற்றுக்கு புரோக்கர்கள் மூலமாக பெரும் தொகை லஞ்சமாக பெறப்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் லஞ்சம் மற்றும் கமிஷன் வாங்கும் உள்ளூர் திட்ட குழுமம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை பொறி வைத்து பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.

உள்ளூர் திட்ட குழுமம், கோவை மாநகராட்சியின் நகரமைப்பு பிரிவு அலுவலகத்தில் அரசு அதிகாரிகள் முறைகேடாக சில புரோக்கர்களை பணி செய்ய அனுமதித்து இருப்பதாக தெரிகிறது. இவர்கள் அரசு அலுவலர்கள் எனக் கூறி பொதுமக்களிடம் கட்டட அனுமதிக்காக பணம் பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புரோக்கர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தீபாவளி நெருங்கி வரும் நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் பணம் வாரி குவிக்கும் அரசு அலுவலர்களை சிக்க வைக்க திட்டம் வகுத்து காத்திருக்கின்றனர். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#coimbatorecorporation #coimbatorecorruption #in4net

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More