IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

காணாமல் போன 5 வயது சிறுமிக்காக, தீபாவளி. பொங்கலை தவிர்த்த கிராம மக்கள்

44

 

5 வயது சிறுமி காணாமல் போய் 3 மாதங்களுக்கு மேல் ஆகியும், அச்சிறுமி கிடைக்காததால் அக்கிராம மக்கள் தீபாவளி, பொங்கல் கொண்டாடுவதை தவிர்த்துள்ளனர்.

கோவை மாவட்டம், சூலூர் அருகேயுள்ள குமாரபாளையம் கிராமத்தில் சுமார் 350க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தினக்கூலிகளாவும், தறிஓட்டியும் பிழைத்து வரும் இவர்கள் குடிசைகளிலும், ஓட்டு வீடுகளிலுமே வசித்து வருகின்றனர்.

Related Posts
1 of 4

இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த ஜெயக்குமார்-கவிதா தம்பதியின் 5 வயது மகள் சாமினி கடந்த அக்டோபர் மாதம் 5ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தவள் மாயமாகி விட்டாளாம். அக்கம், பக்கத்தில் இரவு வரை தேடியும் கிடைக்காததால் இது பற்றி சூலூர் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். இது தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டும் சிறுமி கிடைக்கவில்லை. மேலும் அக்கிராம மக்களும் சுற்றியுள்ள அடர்ந்த காடுகள், வயல்வெளிகளிலும் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

சிறுமி தொலைந்து போய் 3 மாதங்களுக்கு மேலானதால் அக்கிராமத்தினர் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை கொண்டாடாமல் புறக்கணித்து உள்ளனர். தொலைந்துபோன சிறுமியை கண்டுபிடிக்கும் பணியில் தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிறுமி கிடைக்காததால் அக்கிராம மக்கள் மிகுந்த அச்சத்துடனும், சோகத்துடனுமே உள்ளனர்.

#children #missing #villagepeople #notcelebrate #diwali #pongal