IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்க ஏஎஸ்கே இன்பராவின் புதிய முயற்சி

8


முதல் முதலாக, அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன், பயனாளர்களுக்கும்/ வாடகைதாரருக்கும் வசதியாக நிம்மதியாக தொழிலை நடத்தும் வகையில் ஒரு புதுமையான மால் ஒன்று உருவாகியுள்ளது. இந்த புதுமையான மாலில் மாதந்தோறும் நிலையான வாடகை செலுத்த வேண்டும் என்ற நிலை இல்லை. ஆட்கள் தேவை என்ற கவலை இல்லை. சந்தைப்படுத்துதலில் அதிக செலவும் செய்ய வேண்டியது இல்லை. வாடகையாக நீங்கள் செலுத்தும் வருவாய் பங்களிப்பில், ஆட்களுக்கான செலவு மற்றும் சந்தைப்படுத்துதலுக்கான செலவு ஆகியவையும் பகிரப்பட்டு விடும்.


ஆம், இத்தகைய புதுமையான மால், கோவையில் சாயிபாபா காலனியில் உள்ள ராஜா அண்ணாமலை ரோட்டில் தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக துவக்கப்படுகிறது. வாகனங்கள் நிறுத்தும் வசதியுடன் தரைத்தளத்தில் 5800 சதுரடியில் இது அமைந்துள்ளது.


இது குறித்து ஏஎஸ்கே இன்பரா பிரைவேட் லிமிடெட் நிறுவனர் ராஜேஷ் கீர்த்தி மற்றும், செயல் பிரிவு இயக்குனர் ஸ்ரீதர் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: உலகிலேயே முதல் முறையாக இந்த புதுமையான மாலை உருவாக்கியுள்ளோம். சில்லறை வணிகர்களின் மூன்று பிரச்னைகளைகளான 1) அதிக வாடகை 2) அதிகமான ஆள் கூலி 3) சந்தைப்படுத்துதலுக்கான செலவு ஆகியவற்றுக்கு தீர்வாக அமைகிறது. இந்த மாலில், ஆயத்த ஆடைகள், வீட்டு உபயோக ஜவுளிகள், அலங்கார நகைகள், உதிரி பொருட்கள், விளையாட்டுக்கள் மற்றும் பல்வேறு உணவு வகைகள், 100% சைவ உணவு வகை உணவுச்சாலை போன்றவை இடம் பெற்றுள்ளன. பணத்திற்கும் பொருளுக்கும் மதிப்பளிப்பதோடு, தரமான உணவுக்கும் பொறுப்பேற்று செயல்படுத்துகிறது எங்களது குழு.


எதிர்காலத்தில் கோவையில் கோவைபுதுார், மேட்டுப்பாளையம் ரோடு மற்றும் சரவணம்பட்டியில் இது போன்ற திட்டங்களை 6000 சதுரடியிலிருந்து 40000 சதுரடி வரை இந்த ஆண்டு இறுதிக்குள் அமைக்க திட்டமிட்டுள்ளோம். கோவை நகரம் முழுவதும் நாங்கள் 75000 சதுரடி சில்லறை விற்பனையகங்களைக் கொண்டுள்ளோம். 500 க்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.


புதிய மால்கள் கொச்சியில் அக்டோபர் 15ம் தேதியும், பெங்களூரு, சென்னையில் 2020 முதல் காலாண்டிலும் துவக்க திட்டமிட்டுள்ளோம். திறமையான இளம் தலைமுறையினரை ஊக்குவிக்கவும், புதிய ஸ்டார்ட் அப் களை துவக்கவும் சிறந்த தளத்தை உருவாக்கி தர வேண்டும் என்பது தான் இப்புதுமையான யோசனையின் நோக்கம். சிறந்த ஸ்டார்ட் அப் யோசனையில் வரும் இளைய தலைமுறையினர், எளிதாக வெற்றி பெற வேண்டும் என்பது எங்களது விருப்பம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


ஏஎம்பியில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் கவர்ச்சிகரமானதாக மட்டுமின்றி, போட்டிவிலையில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். ஏஎம்பியில் சில்லறை விற்பனை யில் மூன்று முக்கிய பிரச்னைகளின்றி விற்பனையாளர்கள் இருப்பதால், இது சாத்தியமாகிறது. ஏஎம்பி மாடல், வாடிக்கையாளர் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு உகந்த மாடல். இந்த மாலில் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள் 8489920002 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


#Coimbatore #ASK Era Infra #Innovative #Shopping Mall