IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

தேங்காய் சிரட்டையை வைத்து தயாராகும் ஒயின் கப்

Get real time updates directly on you device, subscribe now.

தேங்காய் சிரட்டையை கொண்டு டீ கப் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

பொள்ளாட்சியை அடுத்த கிணத்துக்கடவு அருகே உள்ள கருப்பம்பாளையத்தை சேர்ந்தவர் ராதாலட்சுமி. இவர் கோடங்கி பாளையத்தில் தேங்காய் சிரட்டையில் இருந்து வித விதமான பொருட்களை உருவாக்கி அதனை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி ஏற்றுமதி செய்கிறார்.

தென்னையை சார்ந்த ஏராளமான பொருட்கள் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அந்த வகையில் தற்போது அதில் இருந்து மற்றொரு பொருளும் ஏற்றுமதியில் விறுவிறுப்பு அடைந்துள்ளது.

பொதுவாக நாம் தேங்காயின் பருப்பை மட்டும் சமையலுக்கு பயன்படுத்திவிட்டு அந்த தேங்காய் சிரட்டையை வெளியே வீசிவிடுவோம். ஆனால் அந்த தேங்காய் சிரட்டையை வைத்து ராதாலெட்சுமி பல பொருட்களை செய்து வருகிறார். மேலும் அதை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்.

இதற்கு வெளிநாடுகளில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. தேங்காய் சிரட்டைகளை வைத்து டீ கப், ஒயின் கப், ஐஸ்கிரீம் கப், ஊது பத்தி ஸ்டாண்ட், உண்டியல் என 37 வகையான மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தற்போது தயாரிக்கப்படுகிறது.

இந்த பொருட்களின் விலை 6 ரூபாயில் இருந்து 130 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு பல கோடி மதிப்பில் வருமானம் ஈட்டுவதாக கூறியுள்ளார்.
#

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader