IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தொப்பையை குறைக்கும் தேங்காய்

115


நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் ஒன்று தேங்காய். உலகில் வெப்ப மண்டல நாடுகளில் மட்டுமே விளைகின்ற ஒரு பணப்பயிராக தேங்காய் இருக்கிறது. பூமியின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் இளநீர், தேங்காய் போன்றவற்றை தங்களது அன்றாட உணவு தயாரிப்பிலும் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கும் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.


ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு இயற்கை உணவாக இருக்கும் தேங்காயை தினமும் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் மருத்துவ ரீதியான நன்மைகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

  • தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.

  • தீ புண்களில் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் விரைவில் குண்மாகும்.

  • தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.

  • தினமும் காலையில் சிறிதளவு புதிய பச்சை தேங்காயை மென்று தின்பதால் உடலுக்கு கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் கிடைத்து எலும்புகள் மற்றும் பற்களை வலுவடையச் செய்கிறது.

  • தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

  • தேங்காய் பாலில் கசகச, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் சரியாகும்.

  • தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தை நல்ல நிறமாகப் பிறக்கும்.

  • மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங்குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது.

  • தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கின்றனர்.

  • நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும்.

  • தேங்காய் சிரட்டையில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.

  • தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. பச்சை தேங்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும்.

  • பச்சை தேங்காயை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப் பகுதியில் கொழுப்பு படிவதைத் தடுத்து, தொந்தி ஏற்படாமல் காக்கிறது. உடல் நலனை சீராக்குகிறது.


#Coconut #reducing #Belly