IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தேங்காய் பால் பனியாரம்

435


தேவையான பொருட்கள் :

உளுந்து – அரைக்கப், பச்சரிசி – அரைக்கப், தேங்காய் – ஒன்று, பால் – ஒரு டம்ளர், ஏலக்காய் – சிறிது, சர்க்கரை – தேவையான அளவு.

இப்படித்தான் செய்யணும்:

  • உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்திற்கு அரைக்கவும்.

  • தண்ணீர் அதிகம் சேர்க்காமல் தேங்காய் பால் எடுத்து வைத்து கொள்ளவும்.

  • அதனுடன் பால், ஏலக்காய் தூள், ருசிகேற்ப சீனி சேர்த்து வைக்கவும்.

  • அரைத்து வைத்து இருக்கும் மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா கலந்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போடவும்.

  • நல்ல பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும்.

  • பரிமாறும் பொழுது தேவையான அளவு பணியாரத்தை எடுத்து அதில் தேங்காய் பால் சேர்த்து பரிமாறவும்.


#Coconut #milk #Paniyaram