IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

திருநெல்வேலி போலீஸ் துணை கமிஷனருக்கு முதல்வர் பழனிச்சாமி பாராட்டு

Get real time updates directly on you device, subscribe now.

கொரோனா பாதுகாப்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் போலீஸ் துணைகமிஷனரை முதல்வர் பழனிச்சாமி பாராட்டி டிவிட்டர் பதிவிட்டுள்ளார்.திருநெல்வேலி மாநகர போலீஸ் துணைகமிஷனர் சரவணன், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

மாநகர பகுதியில் வயதுமுதிர்ந்தவர்கள் வீடுகளில் தனியாக இருந்தால் அவர்களை பாதுகாப்பதற்காக ‛வேர்களைத்தேடி’ என்ற திட்டத்தை அமல்படுத்தியுள்ளார். இதன்படி குறிப்பிட்ட பகுதியிலோ, தனிநபருக்கோ பிரச்சனை என்றால் அதற்கான போன் எண்களை அழைத்தால் அந்த பகுதி போலீசார் வீடு தேடிவந்து உதவுவார்கள்.

திருநெல்வேலியை சேர்ந்த சாய்தன்யா என்பவர் வெளிநாட்டில் பணிபுரிகிறார். அவர் நேற்று தமது பெற்றோர் தச்சநல்லுாரில் தனியே வசிக்கின்றனர். ஆள்நடமாட்டம் இல்லாததால் பாதுகாப்பின்மையாக உணர்வதாக, துணைகமிஷனருக்கு தகவல் தெரிவித்திருந்தார். தகவலறிந்த சில நிமிடங்களில், தச்சநல்லுார் போலீசார்,செல்வவிக்னேஷ் நகரில் உள்ள அவரது பெற்றோரின் வீட்டிற்கு சென்று விபரத்தை தெரிவித்தனர்.

கொரோனா தடுப்பு முககசவங்களையும் வழங்கி விட்டு வந்தனர். இதனை அறிந்த முதல்வர் பழனிச்சாமி, நேற்று துணை கமிஷனரை பாராட்டி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

டுவிட்டரில் முதல்வர் கூறியதாவது, காவல்துறை உங்கள் நண்பன் என்பதற்கு உதாரணமாக தங்களின் செயல்பாடுகள் சிறப்பானதாக உள்ளன. சமூகவலை தளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு மக்களுக்கு ஓடோடி உதவும் தங்களின் பணிசிறக்கவும், சேவை தொடரவும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் என முதல்வர் பாராட்டியுள்ளார்.

ஒரு துணை கமிஷனரின் செயல்பாட்டை அறிந்து முதல்வர் பாராட்டியது ஒட்டுமொத்த நெல்லை போலீசாரி்ன் செயல்பாட்டிற்கு கிடைத்த பெருமை என போலீசார் பெருமைப்பட்டுக் கொண்டனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader