IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சுத்தம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

171

கீழக்கரை அருகே உள்ள சிக்கல் கிராமத்தில் சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாட்டு தினத்தையொட்டி பாட்டாளி மக்கள் கட்சியின் பசுமை தாயகம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கடலாடி ஒன்றி செயலாளர் இருளாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் சங்க அமைப்பாளர் பூவை சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். அனைவரையும் ஒன்றிய தலைவர் காளிமுத்து வரவேற்று பேசினார்.

இதில் புகை மாசுகள், வீணாகும் குடிநீர் போன்றவை குறித்து பொதுமக்களிடையை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிக்கல் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று, அனைவருக்கும் துண்டு பிரசுங்கள் விநியோகித்தனர்.