IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பள்ளி மாணவர்களுக்கான ‘கிளாஸ்மேட் ஸ்பெல் பீ சீசன் 12’ ஆரம்பம்!

Get real time updates directly on you device, subscribe now.


அகில இந்திய அளவில், பள்ளி மாணவர்களிடையே நடத்தப்படும், நாட்டின் மிகப் பெரிய ஆங்கிலச் சொற்களை பிழையில்லாமல் எழுதும் போட்டியான “கிளாஸ்மேட் ஸ்பெல் பீ – சீசன் 12” போட்டி விரைவில் தொடங்குகிறது. மாணவர்களுக்கான நோட்டுப் புத்தக விற்பனையில் இந்தியாவில் முதல் இடம் பெறும் ஐ.டி.சி. நிறுவனத்தின் ‘கிளாஸ்மேட்’ பிராண்ட் மற்றும் ரேடியோ மிர்ச்சி இரண்டும் இணைந்து கிளாஸ்மேட் ஸ்பெல் பீ – சீசன் 12 நிகழ்ச்சியை நடத்துகின்றன.

ஆங்கிலச் சொற்களை பிழை இல்லாமல் எழுதுவதில் தலை சிறந்து விளங்கும் இந்திய மாணவர்கள், தங்களது தனித் திறமையை அடையாளம் கண்டு கொள்வதோடு, அதற்குரிய அங்கிகாரத்தைப் பெறவும் இந்தப் போட்டி வாய்ப்பளிக்கிறது. 30 நகரங்களில் உள்ள 1000 பள்ளிகளில், 5-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை கற்கும் 5 லட்சம் மாணவர்களை இந்தப் போட்டி எட்டவிருக்கிறது.

இந்தியாவின் எந்தப் பகுதியில் உள்ள மாணவரும் https://classmatespellbee.in/ என்ற வலைதளத்தில் நேரடியாகப் பதிவு செய்து கொண்டும் அல்லது பள்ளிகள் வாயிலாகவும் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். தேசிய அளவில் நடக்க உள்ள இறுதிப் போட்டிக்கு, சிறந்த 16 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த ஆண்டின் இறுதிப் போட்டி நிக்ளோடியன், சோனிக் மற்றும் நிக்ளோடியன் எச்டி ப்ளஸ் போன்ற தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளன.

இது குறித்து ஐ.டி.சி. நிறுவனத்தின் கல்வி மற்றும் எழுது பொருட்கள் வணிகப் பிரிவின் தலைமை அதிகாரி திரு. சைலேந்திர தியாகி கூறுகையில், “ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தன்மை உள்ளது போலவே, ஒவ்வொரு சொல்லுக்கும் இருப்பதாக எங்களது கிளாஸ்மேட் பிராண்ட் நம்புகிறது. அதனால், இந்த ஆண்டு போட்டிக்கான மையக் கருவாக, நாங்கள் எப்போதும் நம்பும் “தனித்தன்மை”யையே முன்னிறுத்தியுள்ளோம்.

கடந்த ஆண்டு நடைபெற்ற கிளாஸ்மேட் ஸ்பெல் பீ போட்டியைவிட சிறப்பாக இந்த 12-ஆம் ஆண்டு போட்டியை ஏற்பாடு செய்துள்ளோம். இதற்காக மேலும் அதிகமான பள்ளிகளை நேரடியாகத் தொடர்பு கொண்டு, தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்.

எங்களது ‘மைகிளாஸ்மேட்’ என்ற மொபைல் அப்ளிகேஷன் மற்றும் இதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள தனி வலைதளம் இரண்டும் – பள்ளி மாணவர்கள் இந்தப் போட்டிக்குப் பதிவு செய்து கொள்ளும் வசதியை வழங்குவதோடு, போட்டிக்கு தங்களைத் தயார் செய்து கொள்ளவும் உதவுகின்றன. மறுபுறம், எங்களது கிளாஸ்மேட் பிராண்ட் பள்ளி மாணவர்களின் கனவான – உலகத் தரத்திலான நோட்டுப் புத்தகங்கள், மற்றும் பிற எழுது பொருட்களை தனித்தன்மையோடு தொடர்ந்து வழங்கும்” எனத் தெரிவித்தார்.

எண்டர்டெயின்ட்மென்ட் நெட்வொர்க் (இந்தியா) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு யத்தீஷ் மேஹ்ரிஷி பேசுகையில், “ஒவ்வோர் ஆண்டும் மாணவர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை ஸ்பெல் பீ உள்ளார்ந்த அளவில் இணைக்கிறது. ஆங்கில சொற்களை பிழையின்றி எழுதும் ஒரு போட்டியாகத் தொடங்கிய இது, இன்று உயர்நிலை ஆங்கில மொழிக் கல்வி நிகழ்ச்சி என்ற அளவிற்கு வளர்ந்துள்ளது. கடந்த காலத்திலும், வரும் நாட்களிலும் நாட்டின் தலை சிறந்த மாணவர்களை மிகவும் நம்பகமான, அறிவு சார் பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க வைப்பது தான் எங்களது நோக்கம்.

ஸ்பெல் பீ இரண்டு விதமான கல்விப் பணி ஆற்றுவதாக நினைக்கிறோம். முதலாவதாக, தங்களது தனித்திறனை வெளிக்காட்ட மாணவர்களை ஊக்குவிக்கிறது. இரண்டாவது, மாணவர்களின் மொழி ஆளுமையை மேம்படுத்திக் கொள்ள ஒரு சாதனமாக பங்களிக்கிறது. எப்போதும் போல, நடப்பாண்டு நிகழ்ச்சியும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு, மாணவர்களை ஊக்குவிப்பதோடு, அடுத்தடுத்த ஆண்டு போட்டிக்கு தயார் செய்து கொள்ள, திட்டமிட மாணவர்களுக்கு உதவும்” எனவும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More