IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

வாட்ஸ்- அப்பில் பரவிய அவதூறு செய்தியால் ஒளிப்பதிவாளர் தற்கொலை

0 52

வாட்ஸ்-அப்பில் அவதூறு பரவியதால் சின்னத்திரை ஒளிப்பதிவாளர் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவரின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக போலீசில் மனைவி புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


திருவள்ளூர் மாவட்டம் செந்நீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 47)  .இவர் சின்னத்திரையில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி ராகவி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளது.


இவர் கடந்த 9-ம் தேதி காலை வேலை உள்ளது என்று கூறி வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தின் அருகே உள்ள மரத்தில் ஆண் ஒருவர் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.  இது குறித்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டனர்.


அவரது சட்டையில் இருந்த ஆதார் கார்டை வைத்து அவர் யார் என்று கண்டுப்பிடித்தனர். அதன் விவரங்களை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். சசிகுமாரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு சசிகுமாரின் குடும்பத்தினருக்கும் தகவல் கொடுத்தனர்.


தகவல் அறிந்த சசிகுமாரின் குடும்பம் ஜோலார்பேட்டைக்கு வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் விசாரணையில் சசிகுமார் சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் ஒளிப்பதிவாளராக வேலைப்பார்த்து வந்தார். வேலை செய்யும் இடத்தில் மகேஷ் என்பவருடன் சில நாட்களாக தகராறு இருந்துள்ளது.

இந்த தகராறு காரணமாக மகேஷ், சசிகுமார் பற்றி வாட்ஸ்-அப்பில் அவதூறாக செய்திகளை பரப்பி சசிகுமாரை மிரட்டியும் வந்துள்ளார். அது மட்டுமின்றி சசிகுமார் மீது விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனால் மனமுடைந்த சசிகுமார் வேலைக்கு செல்வதாக கூறி தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.


இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசில் சசிகுமாரின் மனைவி புகார் கொடுத்தார். அதில் தனது கணவர் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி இருந்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

#crime #whatsapp #fakenews #Cinematographer