IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஈரோடு இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் சிஐஐ எக்ஸ்கான் கருத்தரங்கு

Get real time updates directly on you device, subscribe now.


சிஐஐ எக்ஸ்கான் 2019 கண்காட்சி தொடர்பாக ஈரோட்டில் நடைபெற்ற ஒரு முழுமையான தொடக்க கருத்தரங்க அமர்வில், “தேசத்தை 5 லட்சம் கோடி (டிரில்லியன்) அமெரிக்க டாலர் பொருளாதார நாடாகும்போது கட்டுமான மற்றும் உள்கட்டமைப்புத் துறைக்கான வாய்ப்புகள்” என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. நீடித்த உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு தொழில் நுட்பம் முக்கியப் பங்காற்றும் என்பது இதில் எடுத்துரைக்கப்பட்டது.


5 டிரில்லியன் பொருளாதார நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என அரசு ஒரு தீர்க்கமான இலக்குடன் செயல்பட்டு வருகிறது. இது கட்டுமான மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனங்களுக்கு வளர்ச்சிக்கான புதிய வழிகளை உருவாக்கி கைக்கொடுக்கும் என அமர்வில் பேசிய நிபுணர்கள் எடுத்துரைத்தனர். இந்த அமர்வில் அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் உள்கட்டமைப்பு, கட்டுமான இயந்திரங்கள் தொழில் துறையில் முன்னணியில் உள்ள பலர் கலந்து கொண்டனர்.


சிஐஐ எக்ஸ்கான் 2019’ என்பது தென் இந்தியாவின் மிகப் பெரிய கட்டுமான இயந்திரங்கள் கண்காட்சி ஆகும். நாட்டில் உள்கட்டமைப்புத் துறையின் வளர்ச்சி வேகத்தை அதிகரிக்கும் விதமான அடுத்த தலைமுறை கட்டுமான உபகரணங்கள் மற்றும் தொழில் நுட்பத்தின் பங்கு உள்ளிட்டவை குறித்து இந்தக் கண்காட்சியில் விளக்கப்படும். சிஐஐ எக்ஸ்கான் 2019’ கண்காட்சி, பெங்களூரில் உள்ள சர்வதேச கண்காட்சி மையத்தில் வரும் டிசம்பர் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.


இந்த கண்காட்சி சுமார் 3 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் நடைபெறவுள்ளது. இதில் சீனா, ஜெர்மனி, இத்தாலி, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பல நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. மொத்தம் 1250 நிறுவனங்கள் மற்றும் கட்டுமானத்துறையினர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். அதில் 350-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களாகும். இந்த 5 நாள் கண்காட்சியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து மொத்தம் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்பார்கள்.


இது குறித்து ஸ்க்விங் ஸ்டெட்டர் இந்தியா நிறுவனத்தின் கான்க்ரீட் பம்ப் பிரிவு மற்றும் எஸ்எல்எம் தலைவர் சுதாகர் கூறுகையில் (Mr Sudhakar P, President – Concrete Pump Division & SLM, Schwing Stetter (India) Pvt Ltd), “இது எக்ஸ்கானின் 10-வது ஆண்டு கண்காட்சியாகும். இதன் கருப்பொருள், சுதந்திர இந்தியாவின் 75-வது ஆண்டில் அடுத்த தலைமுறை தொழில் நுட்பம் – ஸ்மார்ட் –ஐ டெக் நெக்ஸ்ட் ஜென் இந்தியா @75 (Smart i-tech- Next Gen India@75) என்பதாகும். ’சிஐஐ எக்ஸ்கான் 2019’ கண்காட்சியானது நவீன தொழில் நுட்பங்களை விளக்கும்.


அத்துடன் நாட்டின் வேகமான உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அடுத்த தலைமுறை கட்டுமான உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் வடிவமைப்பு தொடர்பாகவும் இதில் விளக்கப்படும். 2022-ஆம் ஆண்டில் உலகின் கட்டுமானச் சந்தையில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உள்கட்டமைப்பில் அரசு மிகப் பெரிய முதலீடுகளைச் செய்து வருவது இந்தத் துறையில் வாய்ப்புகளை அதிகரித்து வருகிறது.” என்றார்.


இந்திய தொழில் கூட்டமைப்பின் ஈரோடு தலைவர் மற்றும் டிஎம்டபிள்யூ சிஎன்சி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் என் சண்முகம் (Mr N Shanmugam, Chairman, CII Erode &Managing Director, DMW CNC Solutions) ஈரோட்டில் நடைபெற்ற ’சிஐஐ எக்ஸ்கான் 2019’ கண்காட்சி தொடர்பான அமர்வில் பேசுகையில், “இந்தியாவில் ஒவ்வொரு துறைக்கும் தொழில் நுட்ப முன்னேற்றம் தேவைப்படுகிறது. நாட்டில் வேகமாக நகர்மயமாதல் நடைபெறுவதற்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். அதிக அளவில் வீடுகளுக்கான தேவைகள் உள்ளன.


வீடு வாங்குவோர் மற்றும் வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் கட்டுமான நிறுவனங்கள் என இருதரப்புக்காகவும் அரசு எடுக்கும் முன்முயற்சிகள் மூலமாகவும் கட்டுமானத் துறையின் நவீன தொழில் நுட்பங்களைக் கொண்டும் இந்தத் தேவைகள் அனைத்துமே பூர்த்தி செய்யப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.:” என்றார். சிஐஐ எக்ஸ்கான் -2019’ கண்காட்சியானது இந்தியாவின் கட்டமைப்புத் துறையை சூழலியலுக்கு ஏற்ப நிலைத் தன்மையுடைய வகையில் கட்டமைக்க முயற்சி செய்யும்.


நவீன நகரங்கள் திட்டங்களுக்கு ஊக்கம் அளித்தல், தூய்மை இந்தியா இயக்கத்துக்கு ஆதரவு அளித்தல், திறம் மேம்பாட்டை ஊக்குவித்தல், இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தை முன்னிலைப்படுத்துதல் போன்றவை மேற்கொள்ளப்படும். இவை உள்கட்டமைப்பு மற்றும் அது தொடர்பான துறைகளில் வளர்ச்சி அடைய தேசிய கொள்கைகளாக அமைந்துள்ளன. உள்கட்டமைப்புத் துறைக்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக இந்திய மத்திய அரசு இந்தத் துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் 100 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய முன் வந்துள்ளது.


மேலும் 1 லட்சத்து 25 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுள்ள கிராம சாலைகளை, பிரதம மந்திரி கிராம சாலைகள் தி்ட்டத்தின் கீழ் விரிவுபடுத்தவும் தேசிய நெடுஞ்சாலைகள் தொகுப்பு ஒன்றை உருவாக்கவும் இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. பிரதம மந்திரியின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் 2019- ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து கிராமங்களுக்கும் சாலை இணைப்பை ஏற்படுத்தித் தர திட்டமிடப்பட்டுள்ளது. 2000 கிலோ மீட்டர் நீளமுள்ள கடலோர இணைப்பு சாலைகளை கட்டமைக்கவும் மேம்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் உள்கட்டமைப்பு மற்றும் அது தொடர்பான துறைகளுக்கு மேலும் உத்வேகம் அளித்து வளர்ச்சியை அதிகரிக்கும்.


10-ம்ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக எக்ஸ்கான், சிஐஐ சிறப்பு நிகழ்வுகளாக பல்வேறுமுன்முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளன. உள்கட்டமைப்பில் பெண்கள், செயற்கை நுண்ணறிவு, ஐஓடி, ரோபோடிக்ஸ், ஸ்டார்ட் அப் எனப்பட்டும் தொடக்க நிலை புத்தாக்க நிறுவனங்கள், உதிரிபாகங்கள், வேலை வாய்ப்பு கண்காட்சிகள், பள்ளிக் குழந்தைகளுக்கான போட்டிகள், மரக் கன்று நடும் தினம் உள்ளிட்ட பல அம்சங்களில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


சம்பந்தப்பட்ட அனைவருக்குமே சந்தைப்படுத்துதல் மற்றும் கற்றல் என இரண்டு தளங்களிலும் எக்ஸ்கான் செயல்படுகிறது. அரசும் மூத்த அதிகாரிகளும், பொதுப் பணித்துறை மற்றும் கட்டுமானப் பொறியியல் துறைகளுக்கான அறிவாற்றல் தளமாக இதை எடுத்துக் கொண்டு பயன் அடைகின்றனர். தனியார் ஒப்பந்ததாரர்கள், கட்டுமான நிறுவனத்தினர், சாலை/ உள்கட்டமைப்பு அமைப்பாளர்கள், நவீன நகரங்கள் பணியில் ஈடுபட்டுள்ளோக் / நகர திட்டமிடுபவர்கள், ராணுவம், எல்லை சாலை அமைப்புப நிறுவனம் போன்ற அனைவருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.


தேசத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சியை வேகப்படுத்தும் வகையில் நவீன தொழில் நுட்பங்கள், நவீன கட்டுமான உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் அனைத்தும் கண்காட்சியில் இடம்பெறும். இந்திய கட்டுமான உபகரணங்கள் உற்பத்தியாளர் சங்கம், ’சிஐஐ எக்ஸ்கான் – 2019’ கண்காட்சியில் ஒரு பங்குதாரர் ஆகும்.


#CII #Exxon #IndianIndustryFederation #Erode

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More