IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தாய்மையின் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்திய சியாரா

111


உலகில் வாழும் அனைத்து உயிரிகளிடமும் உள்ள ஓர் உன்னதமான உணர்வு என்னவென்றால் அது தாய்மை ஒன்று தான். இந்த குணம் அறிவையும் தாண்டி அனைத்து உயிரினங்களிடமும் ஒரே மாதிரிதான் காணப்படும். அப்படி ஒரு உன்னதமான உணர்வை உலகிற்கு நிரூபித்துள்ளார் சியாரா என்ற பெண் ஒருவர்.

அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாகாணத்தை சேர்ந்தவர் சியாரா ஸ்ட்ராங்பில்ட். இவர் திருமணத்திற்கு பிறகு தாய்மை அடைந்தவுடன் மிகுந்த மகிழ்ச்சியில் குழந்தையின் வரவிற்காக காத்துக் கொண்டிருந்தார். இவர் கர்ப்பமாக இருந்த போது மருத்துவர் சோதித்து பார்த்தனர். அப்போது வயிற்றில் இருந்த கருவில் இருந்த குழந்தைக்கு ட்ரிசோமி என்ற மரபணு குறைபாடு நோய் இருந்தது கண்டறியப்பட்டது.

Related Posts
1 of 1,210

எனவே குழந்தை பிறந்தால் நிச்சயம் நீண்டநாள் வாழாது. எனவே கருவை கலைத்துவிடலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கு சியாரா மறுப்பு தெரிவித்தார்.

சியாராவின் குழந்தை பிறந்து சிறிது நேரத்திலேயே இறந்து போனது. இதனையடுத்து தனது குழந்தையின் நினைவாக தனது தாய்ப்பாலை தானம் செய்ய முடிவு செய்தார். அதன்படி குழந்தை இறந்த இரண்டு மாதங்களில் 500 அவுன்ஸ் தாய்ப்பாலை நன்கொடையாக வழங்கினார்.

தனது குழந்தை இறந்தாலும் அதன் நினைவாக மற்ற குழந்தைகளுக்கு தனது தாய்ப்பாலை தானமாக வழங்கி தாய்மையின் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்திய இந்த பெண்ணை சமூக வலைதளங்களில் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.