IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அதென்ன நார்கோ டெஸ்ட்? சிதம்பரத்தை சிக்க வைக்க கொளுத்திப் போட்ட சு.சாமி!

3

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் இருக்கும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தால் அவருக்கு நார்கோ டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.


ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் 5 நாள் சிபிஐ காவல் முடிந்த நிலையில், மேலும் 5 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க டில்லி கோர்ட் அனுமதி அளித்தது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் தங்களது கிடுக்குப்பிடி விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு சிதம்பரம் ஆமாம், இல்லை என்ற ஒற்றை வார்த்தையை மட்டுமே பதிலாக கூறி வருகிறாராம். விசாரணைக்கு ஒத்துழைக்க சிதம்பரம் மறுப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


சிதம்பரம் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தால் அவருக்கு நார்கோ டெஸ்ட் நடத்த வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார். இந்த சர்ச்சைக்குரிய கருத்தால் டெல்லி வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பியுள்ளது. அதே நேரம் அதென்ன நார்கோ டெஸ்ட் என்று பலரும் குழப்பம் அடைந்துள்ளனர்.


நார்கோ டெஸ்ட் பற்றிய சிறு விளக்கத்தை இங்கு காணலாம். நார்கோ டெஸ்ட் என்பது சோடியம் பெந்தோதால் அல்லது சோடியம் அமிடால் என்ற மருந்தை ஊசி மூலம் ஒருவர் உடலில் செலுத்தி, மயக்க நிலைக்குக் கொண்டு சென்று விசாரணை நடத்துவதாகும். இதனை உண்மை கண்டறியும் சோதனை என்பார்கள். இந்த மருந்து உடலுக்குள் சென்றால் அவரிடம் கேட்கும் கேள்விக்கு உண்மை மட்டுமே பதிலாக வருமாம். பொய் சொல்ல மாட்டார்களாம். அதோடு அவருக்கு தெரிந்த அத்தனை விஷயங்களையும் அப்படியே வெளியே சொல்லி விடுவார்களா. இது தான் நார்கோ டெஸ்ட் என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்.