சின்னத்திரை டு வெள்ளித்திரை – கலக்கும் பிரபலங்கள் !

Get real time updates directly on you device, subscribe now.

சிவகார்த்திகேயன்

விஜய் டிவி ‘கலக்கப்போவது யாரு’ ஷோவில் மிமிக்ரி செய்து தன் தொலைக்காட்சிப் பயணத்தைத் தொடங்கியவர், அந்த ஷோவின் ரன்னர்-அப் ஆகத் தேர்வானார்.

பின்னர், பாண்டிராஜ் இயக்கத்தில் ‘மெரினா’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தந்து, கோலிவுட்டில் வளர்ந்து வரும் டாப் ஹீரோக்களின் வரிசையில் நிற்கிறார், சிவகார்த்திகேயன்.

ஒரு தடவை, தளபதி விஜய் கூறும் போது, சிவகார்த்திகேயன் சிறுவர்களை கவர்கிறார் என பேசியபோது அந்த அரங்கமே கரவொலி சத்தத்தால் அதிர்ந்தது.

சந்தானம்

விஜய் டிவியின் ‘லொள்ளு சபா’ மூலம் பிரபலமடைந்தவர், சந்தானம். 2004- ஆம் ஆண்டு ‘மன்மதன்’ படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு என்ட்ரி கொடுத்தவர்,

பின்பு ‘சிவா மனசுல சக்தி’ மற்றும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார்.

காமெடி சூப்பர் ஸ்டார் என்ற படத்தை பெற்றாலும் காமெடியனாகவே தனது வாழ்க்கையை கொண்டு போக விரும்பவில்லை சந்தானம்.

ரசிகர்கள் ஆதரவு பெருகப் பெருக ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ மூலம் கதாநாயகன் ஆனார். பின்னர் ‘சர்வர் சுந்தரம்’, ‘ஏ1’ மற்றும் டகால்டி என்று பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

ப்ரியா பவானி சங்கர்

விஜய் டிவி ‘காதல் முதல் கல்யாணம் வரை’ சீரியலில் நடித்ததன் மூலம் இளைஞர்கள் மத்தியில் தனிக் கவனம் பெற்றார்.

தமிழ் முகம் என்பதால் எளிதாக வெள்ளித்திரையிலும் ரசிகர்களைப் பெற்றார்.

‘கடைக்குட்டி சிங்கம்’, ‘மேயாத மான்’, ‘மான்ஸ்டர்’ எனத் தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்துள்ள ப்ரியா, சங்கரின் இந்தியன் 2விலும் இருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

சன் டிவியின் ‘அசத்தப்போவது யாரு’ ஷோவில் தொகுப்பாளராக அறிமுகமானார், ஐஸ்வர்யா ராஜேஷ்.

‘மானாட மயிலாட’ நடன நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றியும் பெற்றார்.

2010-ஆம் ஆண்டு ‘நீதானா அவன்’ படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தவர், இன்று தமிழ் சினிமாவின் சிறந்த நடிகைகளுள் ஒருவராக இருந்து வருகிறார்.

ஹீரோயினாக வளர்ந்து வந்தபோதே ‘காக்கா முட்டை’ படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து பல விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றார்.

‘தர்மதுரை’, ‘வடசென்னை’ மற்றும் க.பெ.ரணசிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நல்ல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

வுமன் சென்ட்ரிக் படமான ‘கனா’வில் முறையாகக் கிரிக்கெட் பயிற்சி எடுத்துக் கொண்டு, பெண் கிரிக்கெட்டராகக் கலக்கியிருப்பார், ஐஸ்வர்யா.

ஹன்சிகா மோத்வானி

ஷக்க லக்க பூம் பூம்’ சீரியலின் மூலம் சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், ஹன்சிகா. அதன்பின் ஓரிரு சீரியல்களில் நடித்தவர், ரித்திக் ரோஷன் நடித்த ‘கோய் மில் கயா (Koi Mil Gaya)’ படத்தின் மூலம் குழந்தை 

நட்சத்திரமாக வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

தன் 16-வது வயதில் ‘தேசமுடுரு (desamuduru)’ என்ற தெலுங்குப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தவர், தொடர்ந்து ‘வேலாயுதம்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘அரண்மனை’ ஆகிய வெற்றிப் படங்களில் நடித்து தமிழக இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறியிருக்கிறார்.

ரோபோ சங்கர்

மதுரையில் பல மேடை நிகழ்ச்சிகளில் ரோபோ வேடம் போட்டு மிமிக்ரி செய்து கொண்டிருந்தவர், விஜய் டிவி ‘கலக்கப்போவது யாரு’ ஷோவில் பங்கேற்றார். 

தொடர்ந்து விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருந்தவருக்கு, இயக்குநர் கோகுல் ‘ரௌத்திரம்’ படத்தில் ஒரு சின்ன ரோல் கொடுத்தார். அந்த சீன் எடிட்டிங்கில் வெட்டப்பட்டது.

மீண்டும் இயக்குநர் கோகுலே அவரின் அடுத்த படமான ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் ஒரு ரோல் கொடுக்க, அதைச் சிறப்பாகச் செய்து முடித்தார் ரோபோ சங்கர்.

‘மாரி’, ‘கலகலப்பு 2’, ‘சிங்கம் 3’ எனப் பல படங்களில் தன் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்தார். சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில், தற்போது அதிக படங்களைக் கையில் வைத்திருப்பவர், ரோபோ சங்கர்தான்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More