IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கொரோனாவைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் புபோனிக் பிளேக் எனும் நோய் சீனாவில் பரவல்

Get real time updates directly on you device, subscribe now.

உலகம் முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனாவை அடுத்து சீனாவில் புபோனிக் பிளேக் எனும் நோய் இருப்பதாக தெரியவந்துள்ளது.

உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் சீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து பரவத் தொடங்கியது. தற்போது 200 நாடுகளுக்கும் மேலாக பரவி உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகின்ற ஒரு கொடிய உயிர்க்கொல்லி வைரஸ் ஆக உள்ளது.

இந்த வைரசின் தாக்கம் இந்த வருடம் முழுவதும் இருக்கும் என கூறப்படுகின்ற நிலையில், கோடிக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை இழந்து வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர்.

இதன் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் வட சீனாவில் உள்ள மங்கோலியா பகுதியில் ஒரு மருத்துவமனையில் புபோனிக் பிளேக் நோய் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது. இந்த வழக்கை உள்ளூர் சுகாதார ஆணையம் இணையத்தில் வெளியிட்டு உறுதி செய்துள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader