IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பிரதமர் மோடியுடன் சேர்ந்து தமிழகத்தை உலுக்க வருகை தரும் சீன அதிபர்

16


பிரதமர் மோடியுடன் சேர்ந்து சீன அதிபர் ஜி ஜின்பிங் தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார்.


இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அதிரடி மாற்றங்களை அறிமுகப்படுத்துவதில் மிகவும் ஆர்வமுள்ளவர். அரசு நிகழ்ச்சிகள், வெளிநாட்டு பிரபலங்களின் வருகை ஆகிய அனைத்தும் எப்போதும் தலைநகர் டெல்லியிலேயே வைக்க வேண்டாம் என்றும், மாநில தலைநகரங்களிலும், மற்ற முக்கிய நகரங்களிலும், குறிப்பாக வெளிநாட்டு தலைவர்களின் வருகை அனைத்து நகரங்களிலும் நடத்த வேண்டும் என்பது பிரதமர் மோடியின் வழக்கம்.


கடந்த முறை, நரேந்திர மோடி பிரதமராக பதவியில் இருந்தபோது வருகை தந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, தனது சொந்த மாநிலமான குஜராத் தலைநகர், ஆமதாபாத்திற்கு அழைத்துச் சென்றார். இந்த முறை தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மகாபலிபுரத்திற்கு சீன அதிபரை பிரதமர் மோடி அழைத்துச் செல்கிறார். இதனால் தமிழகமே மிரண்டு போகப் போகிறது என்கின்றனர் மூத்த அதிகாரிகள்.


அக்டோபர் 11ம் தேதி காலை சீன அதிபர் சென்னை வருகிறார். அங்கிருந்து நேராக மகாபலிபுரம் செல்கின்றனர். வெளியுறவு அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், மொழி பெயர்ப்பாளர்கள் என 300 பேர் கொண்ட மெகா அணியினர்கள் சீன அதிபருடன் சேர்ந்து மகாபலிபுரம் செல்கின்றனர். சீன அதிபரின் வருகைக்காக மகாபலிபுர நகராட்சி மெகா வரவேற்பை அளிக்க உள்ளது. மற்றும் மகாபலிபுரத்திலுள்ள அனைத்து ஹோட்டல்களும் புக் செய்யப்பட்டுள்ளன.


இதேபோல் பிரதமர் மோடியுடனும் 200 அரசு அதிகாரிகள் உட்பட அனைவரும் மகாபலிபுரம் செல்கின்றனர். தமிழகத்திற்கு குறிப்பாக காஞ்சிபுரத்திற்கும், சீனாவிற்கும் உள்ள தொடர்பு இங்கிருந்துதான் போதி தர்மர், புத்த பிக்குவாக சீனா சென்று அங்கு புத்த மதத்தை பரப்பிய வரலாறு குறித்தெல்லாம் பிரதமர் மோடி , சீன அதிபரிடம் பேசுவாராம். பிரதமர் மோடி சீன அதிபர் சந்திப்பு தமிழகத்திற்கு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி தரும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.
#XiJiping #NarendraModi #Meet #Mahabalipuram #In4Net