IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கொரனோவைத் தொடர்ந்து சீனாவில் ஹண்டா வைரஸ் – ஒருவர் பலி

Get real time updates directly on you device, subscribe now.

உலகை அச்சுறுத்தி வரும் கொரனோவின் தாக்கம் இன்னும் முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வரும் சூழ்நிலையில் மீண்டும் சீனாவில் கொரனோ வைரஸைத் தொடர்ந்து புதிதாக ஹண்டா வைரஸ் ஒன்று பரவியுள்ளது.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. உலகளவில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸின் தாக்கம் சீனாவில் தற்போது குறைந்து வருகிறது. இந்நிலையில், அங்கு புதிதாக ஹண்டா வைரஸ் ஒன்று பரவி வருகிறது. யுனான் மாகாணத்தில் இருந்து ஷடாங் மாகாணத்திற்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இவரை சோதித்துப் பார்த்ததில் அவருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது.

எலியின் சிறுநீர், எச்சில், மலம் ஆகியவற்றின் வழியாக மனிதர்களுக்கும் பரவும். ஹண்டா வைரஸ் தாக்குதலும் புளூ காய்ச்சலைப் போன்றே தொடக்கத்தில் இதன் அறிகுறியாகக் காய்ச்சல், குளிர், தலைவலி, வாந்தி, வயிற்றுப் போக்கு ஆகியவை இருக்கும். இது மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வைரஸ் தாக்குதலை ஆரம்பத்தில் கண்டுபிடிப்பது கடினம். பத்து நாட்களுக்குப் பின்னரே தெரிய வரும். இந்த வைரஸும் முதலில் நுரையீரலைத் தாக்கும். பின்னர் ரத்த நாளங்களுக்குள் செல்லும். ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு இந்த வைரஸ் பரவாது. இது மனிதனிடம் இருந்து மனிதனுக்குப் பரவாது என்ற நிம்மதி இருந்தாலும், எலியிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் சீனா வலியுறுத்தி வருகிறது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader