IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சீனாவை தொடர்ந்து ஐரோப்பாவிலும் பரவ துவங்கி உள்ளது கொரோனா வைரஸ்

52

சீனாவை தொடர்ந்து ஐரோப்பாவிலும் பரவ துவங்கி உள்ளது கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பாவிலும் பரவ துவங்கி உள்ளது. இந்த வைரஸ் வேகமாக பரவ துவங்கி உள்ளது. இதை கட்டுப்படுத்த பல வழகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் சீனாவில் வுஹான் நகரில் தான் முதலில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி உள்ளது. இந்த வைரசிற்கு இது வரை 41 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 1300 க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் சீனாவை தொடர்ந்து அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, இந்தோனேசியா, போன்ற நாடுகளில் இந்த வைரஸ் பரவ துவங்கி உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ஐரோப்பாவில் மட்டும் பரவி உள்ள தெரியவந்துள்ளது.

Related Posts
1 of 5

ஐரோப்பாவில் போர்டியாஸ் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நோயாளி ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து பாரிசிலும் ஒருவருக்கு இருப்பது தெரிய வந்துள்ளதாக பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் ஏக்னஸ் புசின் தெரிவித்துள்ளார்.

இதுவரை மொத்தம் 3 நபர்களுக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் சமீபத்தில் சீனா சென்று வந்ததாக தெரியவந்துள்ளது. அதனால் தான் இவர்களுக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேறு யாருக்காவது இது போன்ற வைரஸ் தொற்று உள்ளதா என சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

 

#china #continues #corona #virus #spread #Europe