IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தாய் மீது மோதிய காரை உதைத்த சிறுவன்

128

சிறுவன் ஒருவன் தன் தாய் மீது மோதிய காரை காலால் மிதித்தும் டிரைவரிடம் ஆவேசமாக குரல் எழுப்பியும் கோபத்தை வெளிப்படுத்தும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சினாவில் சோங்கிங் மாகாணத்தில் இளம் பெண் ஒருவர் தனது மகனை கையில் பிடித்துக் கொண்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது சாலையில் வந்த கார் இன்று அவர்கள் மீது மோதியது. கார் மித வேகத்தில் வந்ததால் அவர்கள் மீது பலமாக மோதவில்லை. எனினும் கார் மோதியதில் அந்த பெண் சாலையில் தடுமாறி விழுந்தார்.

Related Posts
1 of 9

இதனால் பதறிய சிறுவன் தனது தாயை ஆசுவாசப்படுத்திவிட்டு, கோபத்துடன் சென்று காரின் முன்பக்கத்தை காலால் எட்டி உதைத்தான். மேலும் காரில் இருந்து இறங்கிய டிரைவரை பார்த்து சிறுவன் ஆவேசமாக திட்டினான். பின்னர் மீண்டும் தாயின் அருகே ஓடி அவரின் நலத்தை உறுதி செய்தான். அதற்குள் அங்கு கூட்டம் கூடிவிட்டது. பின்னர் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் அந்த பெண்ணையும், சிறுவனையும் தனது காரில் ஏற்றி கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

இந்த காட்சிகள் அனைத்தும் சாலையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. சில வினாடிகளே ஓடும் அந்த வீடியோதான் இணையத்தை கலக்கி வருகிறது. சிறுவனின் தாய் பாசமும் அவனின் கோபமும் அனைவரின் மனங்களையும் வென்றுள்ளது.

#China #boy #mother